மேலும் அறிய

ருசி மட்டுமில்ல.. ஆரோக்கியம் அதிகம்! வியாதிகளை தூரவிரட்டும் தேங்காய்ப்பூ!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி  உள்ளிட்ட பகுதிகளில் தேங்காய்ப்பூ விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நம் முன்னோர்கள், உண்ட  உணவை இயற்கையான தாகவும், மருத்துவ குணம் கொண்டதாகவும் கொண்டிருந்தனர். அதன் காரணமாக அவர்கள் நோய்வாய்ப்படுவது என்பது அறியதாக இருந்து வந்தது. காலப்போக்கில் நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் இயற்கைக்கு மாறான உணவுக்கு நாம் மாறிப் போனோம். அதன் விளைவாக நாளுக்கு நாள் புது புது வியாதிகளை கூடாரமாக நமது உடலை மாற்றி, நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாய் மருத்துவமனைக்கு செல்லாத நாள் இல்லை என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இவ்வாறான சூழலின், தற்போது பாரம்பரியம், இயற்கை சார்ந்த உணவு முறை என மீண்டும் பழமையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு சில ஈடுபட்டு வருகின்றனர். ஆர்கானிக் பொருட்களை உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டியுள்ளார்.

ருசி மட்டுமில்ல.. ஆரோக்கியம் அதிகம்! வியாதிகளை தூரவிரட்டும் தேங்காய்ப்பூ!!

இந்த நிலையில்தான் நாம் சிறுவயதில் வீடுகளில் முற்றிய தேங்காயை உடைத்து எடுக்கும்போது அதில் சில சமயம் தேங்காய் பூ என்று சொல்லக்கூடிய தேங்காயின் கரு காணப்படும். அவற்றை அண்ணன் தங்கை அக்கா என போட்டி போட்டுக் கொண்டு சாப்பிட்ட ஒன்று தற்போது காலப்போக்கில் மருகி தற்போது தேங்காய்  பூ வை காண்பது எண்பது அரிதான செயலாகிவிட்டது. சில சமயங்களில் கோயிலில் தேங்காய் உடைக்கும்போது தேங்காயில் பூ இருந்தால் அதனை நல்ல சகுனமாக நாம் கருதுவுதுண்டு. அறிவியல் பூர்வமாக பார்த்தால் தேங்காய்ப் பூ என்பது நன்கு முற்றிய தேங்காயில் இருந்து உண்டாகுகின்ற தேங்காயின் கருவளர்ச்சி தான் இந்த தேங்காய்ப் பூ. 

ருசி மட்டுமில்ல.. ஆரோக்கியம் அதிகம்! வியாதிகளை தூரவிரட்டும் தேங்காய்ப்பூ!!

தேங்காயிலும், தேங்காய் தண்ணீரிலும், இளநீரிலும் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கிறதோ. அதைவிட மிக அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் இந்த தேங்காய்ப்பூவில் உண்டு. அதில் உள்ள மூலக்கூறுகள் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய உயிரைப் பறிக்கும் கொடிய நோய்களுக்கும் மருந்தாக அமைகிறது. அதிக பணிச்சுமை மிகவும் சோர்வாகக் காணப்படுவார்கள். அப்படி இருக்கும்போது தேங்காய்ப் பூவை சாப்பிட்டால் உடலுக்கு அதீத சக்தி கிடைக்கும். நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக 300-க்கும் மேற்பட்ட நோய்கள் இந்த தேங்காய் பூவை உண்பதால் சரியாகும் என சித்த மருத்துவம்  கூறுகிறது.

ருசி மட்டுமில்ல.. ஆரோக்கியம் அதிகம்! வியாதிகளை தூரவிரட்டும் தேங்காய்ப்பூ!!

தேங்காய் பூவினை சிலர் ருசித்திருப்பார்கள். சாலையில் தள்ளுவண்டியில் அடுக்கி விற்கப்பட்டு வரும் தேங்காய்ப் பூவைப் பார்த்துக் கொண்டே ‘இது எதற்காக’ என்ற கேள்வியுடனே சிலர் கடந்து சென்றுகொண்டிருக்கின்றனர். தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் முற்றிய தேங்காயில் இருந்து முளைவிட்ட தேங்காய்களை கொள்முதல் செய்து மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் விற்பனை செய்து வருகின்றனர். 30 ரூபாய்க்கு ஒரு தேங்காய் எண்ணெய் கொள்முதல் செய்வதாகும் அதனை தேங்காய் அளவை பொறுத்து 40,60, 80 வரை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் தேங்காய் பூவின் மருத்துவ குணம் அறிந்து ஏராளமானோர் போட்டி போட்டு அதனை வாங்கிச் சென்று உண்டு வருகின்றனர். மேலும் சிலர் அதன் சுவையை அறிவதற்காக வாங்கி அதனை சுவைத்து வருகின்றனர்.

ருசி மட்டுமில்ல.. ஆரோக்கியம் அதிகம்! வியாதிகளை தூரவிரட்டும் தேங்காய்ப்பூ!!

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், தங்கள் சிறுவயதில் தேங்காய் பூவை சாப்பிட்டு உள்ளதாகவும் அப்போது இதன் மருத்துவ குணம் எல்லாம் தங்களுக்கு தெரியாது, அதன் சுவைக்காக சாப்பிட்டது உண்டு, ஆனால் தற்போது இதில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று தெரியும் போது, எங்களுக்கு தேங்காய் பூ கிடைப்பதில்லை என்றும், வெளியூர் செல்லும்போது சாலையோரங்களில் தற்போது இவைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இதனை கிடைக்கும் இடத்தில் எல்லாம் வாங்கி உண்டு வருவதாக தெரிவித்தனர். எது எப்படியோ, ஆர்கானிக் அரிசி, செக்கு எண்ணெய், கருப்பட்டி வெல்லம், பழைய சோறு கஞ்சி, என்று பாரம்பரிய உணவு என  தற்போது மீண்டும் வரும் பட்டியலில் இந்த தேங்காய் பூவும் சேர்ந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget