மேலும் அறிய
Advertisement
Pugar Petti: மதுரை: மழை, வெயிலில் மலைபோல் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்: நேரடி கொள்முதல் நிலையத்தில் அரங்கேறும் அவலம்!
”எனினும் கிராமத்தினரிடம் பேசியுள்ளேன். அவர்கள் ஆட்கள் ஏற்பாடு செய்யவில்லை என்றால் நாங்களே ஆட்கள் ஏற்பாடு செய்து பணிகளை விரைவாக முடிக்கிறோம்” என நுகர்பொருள் வாணிப கழக மதுரை மண்டல மேலாளர் நம்மிடம் நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர் உழைப்பிற்கு பின் கிடைக்கும் விவசாயப் பயிர்களை மூட்டைகளில் கட்டிப்போட்டாலும், பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டு, பொருட்கள் வீணாகும் அவலம் தொடர்கிறது. இதனை போக்கும் விதமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் சேமிப்பு கிட்டங்கி கட்டி முடிக்கப்பட்டு தமிழ்நாடு முதல்வர் மூலம் திறக்கப்பட்டது.
மதுரை கப்பலூர் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் 12000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 4 மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்களும் திறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு பக்கம் பழையபடி நெற் பயிர்கள் தூத்தி, எடை போடாமல் மூட்டைகளாகவும், திறந்த வெளியில் குவியலாகவும் கொட்டிக் கிடப்பது விவசாயிகளை வேதனைக்கு தள்ளுகிறது.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் பா.ஸ்டாலின் ABP Nadu-விடம் கூறும்போது," ஒவ்வொரு விவசாயியும் நஷ்டத்தை நினைக்காமல் விவசாயம் செய்து கஷ்டப்பட்டு நெல்லை களத்திற்கு கொண்டு வருகிறான். ஆனால் நேரடி கொள் முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு அதனை கொண்டு செல்வதில் பல்வேறு சிக்கல் ஏற்படுகிறது. நெல் கொள்முதலில் சுணக்கம் ஏற்படும்போது, திடீர் என மழை பெய்தால் ஆண்டு முழுதும் விவசாயிகள் உழைப்பு வீணாகிறது. எனவே அதிகாரிகள் நெல் கொள்முதல் செய்வதை விரைவுபடுத்த வேண்டும். இல்லை எனில் இதுதொடர்பாக உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர உள்ளேன் என தெரிவித்தார்.
மேலும் மதுரை மாவட்டம் மேலூர் வெள்ளலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி தனக்கொடி கூறும்போது," மேலூர் பகுதியில் தனியாமங்கலம், கட்டகாளபட்டி, உறங்கான்படி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. எங்கள் கிராமத்திலும் டி.என்.சி.எஸ்.சி., மூலம் நெல் மூட்டைகள் வாங்கப்படுகிறது. 200க்கும் மேற்பட்ட டோக்கன்கள் போடப்பட்டும் நெல்லை தூத்தி, எடை போட்டு எடுத்துச் செல்லவில்லை. என்ன காரணம் என்றும் தெரியவில்லை. விரைவாக பணிகளை முடிக்க வேண்டும். நெல் குவியல் கிடப்பதை பார்க்கும் போது கஷ்டமாக உள்ளது" என்று வேதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக தகவல் கேட்க நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அருண் பிரசாத்தை தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறும்போது, " வெள்ளலூர் பகுதிக்கு மட்டும் மூன்று தூத்தும் மிஷின்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் 30 நாட்களில் செய்ய வேண்டிய பணி 10 நாட்களில் செய்து முடிக்க முடியும். ஆனால் லோடு மேன் பிரச்னையால் கொள்முதல் செய்யும் பணி தொய்வு ஏற்பட்டுள்ளது. கிராம பகுதி மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் விரைவாக பணிகள் முடிந்துவிடும். கிட்டதட்ட 160 செண்டர்கள் உள்ளன.
எல்லா இடங்களுக்கும் லோடு மேன்களை நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்வது சிரமம். எனவே நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு அந்தந்த பகுதி மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலவளவு, கொங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இப்படியான ஒத்துழைப்பு கிடைப்பதால் பணிகள் விரைவாக முடிந்து பக்கத்து பகுதிகளுக்கு சென்று மூட்டைகள் எடுக்க முடிகிறது. எனினும் வெள்ளாலூர் உள்ளிட்ட கிராமத்தினரிடம் பேசியுள்ளேன். அவர்கள் ஆட்கள் ஏற்பாடு செய்யவில்லை என்றால் நாங்களே ஆட்கள் ஏற்பாடு செய்து. பணிகளை விரைவாக முடிக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion