மேலும் அறிய

Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி

Chennai Rain Updates December 17,18,19: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, சென்னையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னயில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், காற்றழுத்தம் , எங்கு உள்ளது, எப்படி நகரும், எந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பது குறித்து பார்ப்போம்.

காற்றழுத்த தாழ்வு பகுதி:

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த இரு தினங்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில், தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

அதாவது, காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, சென்னை கடல் பகுதியை ஒட்டி வந்து, வடக்கு நோக்கி நகர கூடும் என வானிலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

 

சென்னை வானிலை: அடுத்த 24 மணி நேரம்:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17:12:2024: இன்று மழை பெறும் மாவட்டங்கள்

வட கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் இதர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

18:12:2024: நாளை மழை பெறும் மாவட்டங்கள்

வட கடலோர தமிழகத்தில் அநேக இடங்களில், இதர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது

19-12-2024: நாளை மறுநாள்

தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

காற்றழுத்தம் நிலை கொள்ளும் மாதிரி வரைபடம்:

Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி

20-12-2024:

தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

21:12.2014 முதல் 23:14-2024:

வடை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

 

 

 

 

 

தலைப்பு செய்திகள்

" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
Tamil Nadu Weather Update Today: மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
Embed widget