Agri Stack: விவசாயிகளே உங்களுக்கு தான் ! உடனே இதை பதிவு செய்யுங்கள்
அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும் அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட தமிழ்நாட்டில் வேளாண் அடுக்குத்திட்டம் ( Agri Stack ) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விழுப்புரம்: விவசாயிகளுக்கான தனி அடையாள எண் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. எனவே விவசாயிகள் உடனடியாக தங்கள் நிலம் தொடர்பான ஆவணங்களான பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண் விவரங்களுடன் வேளாண்துறை அலுவலர்களையோ, அல்லது பொது சேவை மையங்களையோ தொடர்பு கொண்டு உடனடியாக பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப்பலன்களை பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள். பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் கால தாமதத்தினை தவிர்க்கும் வகையிலும், அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும் அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட தமிழ்நாட்டில் வேளாண் அடுக்குத்திட்டம் (Agri Stack) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வணிகத்துறை சார்ந்த கள அலுவலர்கள், மகளிர் திட்ட சமுதாய பயிற்றுநர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர் அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டு விவசாயிகளுக்கான தனி அடையாள எண் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, அனைத்து பொது சேவை மையங்களிலும் இலவசமாக பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் பி.எம்.கிசான் ஊக்கத்தொகை பெறும் 89958 விவசாயிகளில் 37214 பேர் மட்டுமே தற்போது வரை அடையாள எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 52744 விவசாயிகள் உடனடியாக தங்கள் நிலம் தொடர்பான ஆவணங்களான பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண் விவரங்களுடன் வேளாண்துறை அலுவலர்களையோ, அல்லது பொது சேவை மையங்களையோ தொடர்பு கொண்டு உடனடியாக பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்டு பின்னர் செயலியில் பதிவேற்றம் செய்து தனி அடையாள எண் வழங்கப்படும்.
19 தவணைகளாக பி.எம்.கிசான் ஊக்கத் தொகை
இதுவரை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என 19 தவணைகளாக பி.எம்.கிசான் ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தொடர்ந்து பி.எம்.கிசான் ஊக்கத்தொகை பெற விரைவாக வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி தனி அடையாள எண் கட்டாயம் பெற வேண்டும் பி.எம்.கிசான் பெறும் விவசாயிகள் தொடர்ந்து பணம் பெற தனி அடையாள எண் பெற்றிட அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விவரம் அறிய தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களின் கைபேசி எண்கள் கீழ்வருமாறு:
கோலியனூர் (வ.பிரேமலதா- 9443771455). காணை (ஆர்.ஆனந்தி- 9443307247), கண்டமங்கலம் (எம்.விஜய்- 8610344221), விக்கிரவாண்டி (என்.கங்காகௌரி - 9715376795), வானூர் (சி.எத்திராஜ் - 9500610513), ஒலக்கூர் (எ.விஜயசந்தர்- 9976126021) மயிலம் (கே.மகாலட்சுமி- 9865174470), மரக்காணம் (சி.ஆரோக்கியராஜ்- 9443083075), செஞ்சி (இ.சுஜாதா- 9443549399), வல்லம் (கே.சரவணன்- 9443050514), மேல்மலையனூர் (எம்.சிவசங்கரி- 6369242160), முகையூர்(ப்பி.சுரேஷ்- 9486985445), திருவெண்ணைநல்லூர்(எஸ்.ஆர்.ராஜேஸ்வரி- 9626048586) ஆகிய எண்களை தொடர்புகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.





















