PM KISAN :விவசாயிகளுக்கான கிசான் திட்டத்துக்கு ரூ.16, 000 கோடி விடுவிப்பு...பணம் வந்துவிட்டதா என எப்படி பார்ப்பது?
PM KISAN Scheme: பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் 13 வது தவணை தொகையாக ரூ.16 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி விடுவித்தார்
பிரதமர் நரேந்திர மோடி, பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் 13 வது தவணையாக ரூ .16,000 கோடி நிதியை பிப். 27 ஆம் நாள் விடுவித்தார்.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டம்:
2019-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டம் என்பது, நாட்டில் உள்ள நிலம் வைத்துள்ள விவசாய குடும்பங்களுக்கு வருமான ஆதரவை வழங்கும் மத்திய அரசின் திட்டமாகும்.
2 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்கள், மத்திய அரசின் திட்டமான பி.எம் கிசான் திட்டத்தின் மூலம் வருமான ஆதரவு நிதியை பெற தகுதியுடையவர்கள்.
இது ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ரூ .2,000 என மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. பயனாளியின் வங்கிக் கணக்கில் இந்தத் தொகை நேரடியாக வரவு வைக்கப்படும்.
ரூ.6,000 ஊக்க தொகை:
இதன் மூலம், பி.எம்-கிசான் திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகள், தங்கள் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்குகளில் ரூ 2000 தவணையைப் பெறுவார்கள். பி.எம்-கிசான் வலைத்தளத்தின்படி, "பி.எம்-கிசான் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஈ.கே.ஒய்.சி கட்டாயமாகும். கே.ஒய்.சிக்கு அருகிலுள்ள பொது சேவை மையத்தை (சி.எஸ்.சி) தொடர்பு கொள்ளலாம்.
"பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ், தகுதிவாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு தலா ரூ .2000 என, மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ .6000 வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 13வது தவணையாக ரூ.16,000 கோடியை பிரதமர் விடுவித்தார். இந்நிலையில், ரூ.2000 வங்கி கணக்கில் வந்து விட்டதா என்பதை தெரிந்து கொள்ளவும்.
தெரிந்துகொள்ளும் முறை
1: அதிகாரப்பூர்வ https://pmkisan.gov.in/ பிஎம் கிசான் வலைப்பக்கத்தை பார்வையிடவும்
படி 2: 'Farmers corner' என்பது கீழ் 'Beneficiary Status' என்பதை கிளிக் செய்யவும்
படி 3: ஆதார் எண், கணக்கு எண் அல்லது மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிடவும்
படி 4: பின்னர் 'Get Status' tab எனபதை கிளிக் செய்யவும்
பின்னர் பயனாளியின் விவரங்கள் மற்றும் பண வரவு குறித்த விவரங்கள் காண்பிக்கப்படும்.
As far as agriculture is concerned, we are as much focused on the future as we are on the present. pic.twitter.com/TmNjcGrw2i
— Narendra Modi (@narendramodi) February 27, 2023