மேலும் அறிய

மயிலாடுதுறை விவசாயிகளே ரெடியா? ஜூன் 25-ல் ஆட்சியருடன் நேரடி சந்திப்பு - கோரிக்கைகளை முன்வைக்க அழைப்பு!

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 25-ல் நடைபெற உள்ளதாக ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஜூன் (2026) மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஜூன் 25ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தெரிவித்துள்ளார். இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயப் பெருமக்கள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளின் குறைகளைக் கேட்டு, அவற்றுக்கு உரிய தீர்வு காணும் நோக்கில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 2026 ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 25.06.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள முதன்மை கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தலைமை தாங்கி, விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுகிறார்.

பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்பு

இக்கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்கவும், தேவையான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட அளவிலான பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். குறிப்பாக பின்வரும் துறைகளைச் சார்ந்த முதன்மை அலுவலர்கள் கூட்டத்தில் முன்னிலை வகிக்கின்றனர்.

* வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை

* நீர்வளத்துறை (நீர்ப்பாசனம்)

* கூட்டுறவுத் துறை

* தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO)

* கால்நடை பராமரிப்புத் துறை

* வேளாண்மை பொறியியல் துறை

* தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை

* தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC)

விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள்

மயிலாடுதுறை மாவட்டம் டெல்டா பாசனப் பகுதியாக விளங்குவதால், இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்களின் விவசாயம் சார்ந்த பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைக்க வாய்ப்புள்ளது.

விவசாயிகள் கோரக்கூடிய முக்கிய விபரங்கள்

குறுவை சாகுபடிப் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், பாசனப் பாத்திகளுக்குத் தேவையான தடையற்ற நீர் விநியோகம், வாய்க்கால்கள் தூர்வாருதல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் தரமான விதைகள் மற்றும் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்தல், விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்குதல் போன்ற பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடு, கால்நடைகளுக்கான மருத்துவ வசதிகள் மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்படும் மானியத் திட்டங்கள் குறித்தும் விவசாயிகள் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் நேரடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.

விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

இக்கூட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து முன்னோடி விவசாயிகள், முற்போக்கு சிந்தனை கொண்ட உழவர்கள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அனைவரும் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். விவசாயத் தொழில் மற்றும் உழவர்களின் நலன் சார்ந்த தங்களது நியாயமான கோரிக்கைகள், நிறைகுறைகள் மற்றும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை இக்கூட்டத்தில் நேரில் தெரிவித்து பயன்பெறலாம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மனுக்கள் மீது உடடி நடவடிக்கை

விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி, கூட்டத்தின் போது மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்கலாம். பெறப்படும் மனுக்கள் அனைத்தும் உரிய கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் பார்வைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். மேலும், முந்தைய கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்களின் மீதான நடவடிவக்கை விபரங்கள் மற்றும் தீர்வு குறித்தும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளது.

எனவே, மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் இக்கூட்டத்தை நல்முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
பயிர் இழப்பைத் தடுக்க சூப்பர் வழிமுறைகள்! விழுப்புரத்தில் அட்மா திட்ட விவசாயிகள் - விஞ்ஞானிகள் சந்திப்பு!
பயிர் இழப்பைத் தடுக்க சூப்பர் வழிமுறைகள்! விழுப்புரத்தில் அட்மா திட்ட விவசாயிகள் - விஞ்ஞானிகள் சந்திப்பு!
அறுவடைக்கு ஏதாவது எஞ்சுமா? கடன்கள் மட்டும்தான் மிஞ்சுமா?: தஞ்சை பகுதி விவசாயிகளுக்கு புதிய வேதனை
அறுவடைக்கு ஏதாவது எஞ்சுமா? கடன்கள் மட்டும்தான் மிஞ்சுமா?: தஞ்சை பகுதி விவசாயிகளுக்கு புதிய வேதனை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget