Dragon Fruit Cultivation: மயிலாடுதுறை வயலில் டிராகன் - சாதித்து காட்டிய விவசாயி!
மயிலாடுதுறையில் மாற்று பயிர் முறையில் டிராகன் பழம் சாகுபடி செய்து 63 வயதான விவசாயி சாதனை படைத்துள்ளார்.
மயிலாடுதுறை அருகே மாற்று பயிர் முறையில் டிராகன் பழம் சாகுபடி செய்து 63 வயதான பாண்டியன் என்ற விவசாயி சாதனை படைத்துள்ளார்.
மாற்றத்தின் வெற்றி
வாழ்வில் வித்தியாசமாக மாத்தி யோசிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். அதற்கு நாம் பல உதாரணங்களை கண்டு வருகிறோம். அது இந்த துறை அந்த துறை என்று இல்லைமால் எந்த துறையிலும் மாற்றம் நிச்சயம் ஏற்றம் தருவதாக மாறிவிடுகிறது. குறிப்பாக விவசாயிகள் மத்தியில் நல்ல மகசூல் இல்லை, மகசூல் இருந்தாலும் அதற்கேற்ப விலையில்லை என கூறி விவசாயம் என்றாலோ அது நஷ்டம் என்ற மனநிலை தற்போது இருந்து வருகிறது.
இதற்காக மாற்றாக பல விவசாயிகள் பல விதமாக, தங்கள் விவசாயதில் புதுமையும், மாற்றத்தையும் கொண்டு வந்து விவசாத்தை ஒரு லாபகரமான மற்ற தொழிலைப்போலவே செய்து சாதித்து காட்டுகின்றனர். அதற்கு உதாரணமாக மயிலாடுதுறை அருகே ஒரு விவசாயி சாதித்துள்ளார்.
அதிகம் விரும்பப்படும் வெளிநாட்டு பழ வகைகள்
தற்போது இந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் தற்போது வெளிநாட்டை சேர்ந்த பழ வகைகளை மக்கள் அதிகளவில் விரும்பி சாப்பிட தொடங்கியுள்ளனர். அவற்றை நாம் வெளிநாட்டில் இருந்து தான் அதிகளவில் இறக்குமதி செய்கிறோம். அப்படிப்பட்ட பழங்களில் ஒன்றுதான் டிராகன் பழம். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்த ராதாநல்லூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி முதன்முறையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்று பயிர் சோதனை முறையில் பயிரிடப்பட்ட ‘டிராகன் பழம்’ அமோக விளைச்சல் கண்டதால் தற்போது கூடுதல் பரப்பில் பயிரிட்டு நல்ல லாபம் பார்த்து வருகிறார்.
மாத்தியோசித்த விவசாயி
மயிலாடுதுறையில் மாவட்ட மணல்மேட்டை அடுத்த ராதாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் 63 வயதான இளங்கலை அறிவியல் (தாவரவியல்) பட்டம் பெற்ற விவசாயி பாண்டின். இவரது குடும்பம் பாராம்பரிய விவசாய குடும்பம் என்பதால் தொடர்ந்து பல தலைமுறைகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக நெல் சாகுபடி செய்த வந்துள்ளனர்.
எல்லா விவசாயிகள் போல இவரும் தனது விளைநிலத்தில் நெல் உளுந்து , பருத்தி என பயிரிட்டு வந்தார். அவைகளை பராமரிக்க கவாத்து செய்தல், மருந்தடித்தல், அறுவடை செய்தல் என ஆண்டு முழுவதும் கூலியாட்களைக் கொண்டு பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் கூலி ஆட்கள் பற்றாக்குறை, பராமரிப்புச் செலவு அதிகம் காரணமாக மாற்று விவசாயத்தை கையில் எடுப்பதை பற்றி யோசித்தார் விவசாயி பாண்டியன். அதனை தொடர்ந்து அதற்கான தேடுதலை யூடியூப் போன்ற சமூக ஊடங்களில் தேடியுள்ளார்.
டிராகன் பழம்
டிராகன் பழம் தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, இஸ்ரேல் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் பிரபலமானது. தற்போது கர்நாடகா, நாகலாந்து, குஜராத் மாநிலம் என இந்தியாவில் இந்த பழம் பயிரிடுதல் அதிகரித்து வருகிறது. டிராகன் பழம் நோய் எதிர்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வெள்ளை ரத்த அணுக்களை பாதுகாக்க உதவுகிறது. இந்தப் பழங்கள் கால்சியம் சத்துக்கள் மிகுந்துக் காணப்படுவதாலும், குறிப்பாக கேன்சர் செல்களை அழிக்கும் சக்தி கொண்டது.
இந்த பழத்தில் உள்ள இனிப்பு சர்க்கரை நோயாளிகளை பாதிக்காது. இதனால் இந்தப் பழங்களை மக்கள் ஆர்வமுடன் வாங்குகின்றனர். கிரிக்கெட் பந்துஅளவிற்கு, 400 கிராம் முதல் 600 கிராம் வரை எடை கொண்ட இந்தப் பழங்களுக்கு இப்போது ஏகப்பட்ட கிராக்கி உள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரு பகுதியில் இருந்தும், குஜராத் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு பெருமளவு இறக்குமதி செய்யப்படும் டிராகன் பழங்கள் தமிழ்நாட்டில் தர்மபுரி, விருதுநகர், பெரம்பலூரில் சாகுபடி நடைபெறுகிறது.
மயிலாடுதுறையில் டிராகன்
அதனைத் தொடர்ந்து விவசாயி பாண்டியனின் முயற்சியால் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் மாற்று பயிரை சாகுபடி செய்ய விரும்பிய பாண்டியன், கடந்த ஆண்டு தாய்லாந்து நாட்டின் புகழ்பெற்ற பழமான டிராகன் பழம் சாகுபடி செய்ய முடிவு செய்த அவர் தற்போது அதனை சாகுபடி செய்துள்ளார். அதற்கான சேதனை முறையில் செடிகளை பாண்டிச்சேரியில் இருந்து வாங்கி வந்த அவர் 30 செடிகளை பயிரிட்டுள்ளனர். அவைகள் ஒரு வருடத்தில் அவர் எதிர்பாத்ததை விட கூடுதல் மகசூல் தர தனது ஒரு ஏக்கர் நிலத்தில் தற்போது 200 டிராகன் செடிகளை தூண் அமைத்து அதனை பயிரிட்டுள்ளார்.
விவசாயின் கருத்து
இதுபற்றி விவசாயி பாண்டியன் கூறுகையில் தமிழகத்தில் டிராகன் ஃபுரூட் சாகுபடி தொழில் நுட்பத்தை யூடியூப் மூலம் அறிந்துகொண்டு 2022 -ல் தொடங்கினேன். தற்போது சீசன் நாட்களில் நாளொன்றுக்கு 4 கிலோ முதல் 5 கிலோ பழங்கள் கிடைக்கின்றன. இவற்றை கிலோ ரூ.200க்கு விற்பனை செய்கிறேன். இவற்றை விற்பனை செய்ய மார்கெட்டிங் எல்லாம் தேவை இல்லை. இதனை பார்ப்பவர்கள் பலரும் தோட்டத்திலேயே வந்து தினசரி வாங்கி செல்கின்றனர்.
1 தூணுக்கு 4 செடி உள்ளது. 1 ஆண்டுக்கு ஒரு தூண் கணக்கில் 200 கிலோ பழங்கள் கிடைக்கும். தொடர்ந்து தூண்கள் சரியாமல் செடிகளை கவாத்து செய்து பராமரித்து வந்தால் நீண்ட நாட்களுக்கு டிராகன் புரூட் செடிகள் பலன் கொடுக்கும். 3 என்றார். பெரும்பாலும் நெல் மற்றும் கரும்பு போன்ற பயிர்களே மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்கனவே விவசாயிகள் சாகுபடி செய்யும் நிலையில், விவசாயத்தில் ஆட்கள் பற்றாக்குறை, பராமரிப்பு குறைவான மாற்று பயிரினை நம்பகுதி விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும்.
இது அதிக லாபம் தரும் என்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட உதவும். மேலும் அரசு இது போன்று மாற்றத்தை நேக்கி விவசாயத்தை எடுத்து செல்லும் சூழலில் அவர்களை ஊக்கப்படுத்த முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். ஆரம்பத்தில் இதனை குறை கூறிய பலரும் தற்போது டிராகன் பழ சாகுபடியில் வெற்றியை கண்டு பாராட்ட துவங்கியுள்ளனர்.
பராமரிப்பு முறை
மார்ச் முதல் செப்டம்பர் வரை சீசன். மழை, பனிக் காலங்களில் பழங்கள் தருவதில்லை. இந்த டிராகன் பழம் கள்ளிச்செடி வகையைச் சேர்ந்தது. 6 அடி கல் ஒன்றை ஊன்றி அதனைச்சுற்றி நான்கு டிராகன் பழ கன்றுகளை நடவு செய்கிறோம். இந்த நான்கு செடிகளும் வளர வளர நடுவில் உள்ள கல்லில் கட்டி வளர்க்கப்படுகிறது. 6 அடி உயரம் வந்தபிறகு கிளைகள் போல் பிரிந்து வளர்கிறது. நடவு செய்த ஒன்றரை ஆண்டுகளில் பலன் தருகிறது. ஒரு ஏக்கரில் பயிரிட சுமார் 6 லட்சம் வரை செலவாகும். ஒரு முறை முதலீடுதான், அதற்குப் பிறகு கூலியாட்களே தேவைப்படாது.
இரண்டு ஏக்கரில் பயிரிட்டாலும் பராமரிக்க, அறுவடை செய்ய வீட்டில் உள்ள இருவர் போதும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சுகிறோம். நோய் தாக்குதல் இல்லாததால் மருந்தடிக்கும் செலவு இல்லை, இயற்கை உரங்களை சொட்டுநீர் மூலமே கொடுத்து விடுகிறோம். டிராகன் பழத்தில் வெள்ளை, மஞ்சள், பிங்க் நிறம் என மூன்று வகை உண்டு. இதில் பிங்க நிறப் பழத்துக்கு அதிக கிராக்கி என்பதால் அந்த வகையைப் பயிரிட்டுள்ளோம்.
15 ஆண்டுகளுக்கு மேல் விளைச்சல்
ஒரு முறை பயிரிட்டால் 15 ஆண்டுகளுக்கு மேல் விளைச்சல் கொடுக்கும். அதிக லாபம் கிடைக்கிறது. ஒரு கிலோ ரூ.200 வரை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.வெளி மார்க்கெட்டில் ரூ.250-க்கு மேல் விற்பனையாகிறது. சிறந்த மருத்துவ குணம் உள்ளதால் மக்களும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். விவசாயிகள் டிராகன் பழ சாகுபடி செய்ய முன்வர வேண்டும். இதற்கான வழிமுறைகளை நானே சொல்லித் தர தயாராக உள்ளேன். எனது மாற்று விவசாயத்துக்குக் கிடைத்த வெற்றி, பிற விவசாயி களுக்கும் கிடைக்க வேண்டும், என்றார்.