மேலும் அறிய

“லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” - 6 மாவட்டங்களில் பயிற்சி: காவிரி கூக்குரல் அழைப்பு!

தமிழகத்தில் மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” என்ற களப் பயிற்சியை காவேரி கூக்குரல் இயக்கம் ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நடத்த உள்ளது.

 கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, தர்மபுரி, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இப்பயிற்சி ஜனவரி 7-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பங்கேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,

"டிம்பர் மரங்கள் விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தையும், தற்போது எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் இருப்பதால் காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாயத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் தமிழக அளவில் பிரபலமாக உள்ள மரப்பண்ணைகளில் கள பயிற்சிகளை நடத்தி வருகிறது. தற்போது உள்ளூர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மண்டல அளவிலான பயிற்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. விவசாயிகள் இதில் பங்கு பெறுவதன் மூலம் தங்கள் ஊருக்கு அருகில் உள்ள பண்ணையை  பார்வையிட்டு,  தங்கள் பகுதியில் நன்றாக வளரக்கூடிய மரங்களை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

அந்த வகையில், தற்போது மண்டல வாரியான பயிற்சிகள் கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, தர்மபுரி, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. பயிற்சியில் அந்தந்த பகுதி முன்னோடி மர விவசாயிகள் மற்றும் களப் பணியாளர்கள் மர சாகுபடி குறித்து விளக்குவார்கள். மேலும், மர விற்பனை, சந்தை வாய்ப்புகள் குறித்தும் விளக்கம் அளிப்பார்கள். 

பயிற்சியைத் தொடர்ந்து காவேரி கூக்குரல் களப் பணியாளர்கள் உங்கள் நிலத்திற்கு நேரடியாக வந்து மண்ணுக்கேற்ற மரங்களை தேர்ந்தெடுக்க ஆலோசனைகளும் வழங்குவார்கள். எனவே இம்மாவட்டங்களை சுற்றியுள்ள விவசாயிகள் இப்பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம். விருப்பம் உள்ள விவசாயிகள் 94425 90079, 94425 90081 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், மர விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையம் காவேரி கூக்குரல் இயக்கம் வழங்குகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 40 ஈஷா நாற்றுப் பண்ணைகளில் விவசாயிகளுக்கு 3 ரூபாய்க்கு குறைந்த விலையில் டிம்பர் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற  மரக்கன்றுகள் 20 -25 ஆண்டுகளில் விலை மதிப்பு மிக்க டிம்பர் மரமாக முதிர்ச்சி அடைந்து நல்ல விலையை ஈட்டித்தரும். கூடுதல் வருமானத்திற்கு மிளகு சாகுபடியும் செய்யலாம். மரம் நடவு செய்து 3 ஆண்டுகளில் மிளகு கன்றுகளை மரத்தில் ஏற்ற முடியும். இதனால் விவசாயிகள் வருடந்தோறும் வருமானம் பெற முடியும்."

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
அடடே... பிப்.28 முதல் எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை- என்ன வேலையெல்லாம் கிடையாது?
அடடே... பிப்.28 முதல் எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை- என்ன வேலையெல்லாம் கிடையாது?
"பெரியாரைப் பத்தி தப்பா பேசுறவங்க பிறப்பைச் சந்தேகப்பட்றேன்" கோபத்தின் உச்சியில் துரைமுருகன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
அடடே... பிப்.28 முதல் எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை- என்ன வேலையெல்லாம் கிடையாது?
அடடே... பிப்.28 முதல் எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை- என்ன வேலையெல்லாம் கிடையாது?
"பெரியாரைப் பத்தி தப்பா பேசுறவங்க பிறப்பைச் சந்தேகப்பட்றேன்" கோபத்தின் உச்சியில் துரைமுருகன்
Chennai Sangamam 2025: “சென்னை சங்கமம்” - 50 விதமான கலைநிகழ்ச்சிகள், உணவும், பொழுதுபோக்கும், எங்கெல்லாம் தெரியுமா?
Chennai Sangamam 2025: “சென்னை சங்கமம்” - 50 விதமான கலைநிகழ்ச்சிகள், உணவும், பொழுதுபோக்கும், எங்கெல்லாம் தெரியுமா?
’வெற்று அறிவிப்பு, இனியும் ஏமாற மாட்டோம்’- தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை- நடந்தது என்ன?
’வெற்று அறிவிப்பு, இனியும் ஏமாற மாட்டோம்’- தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை- நடந்தது என்ன?
TN Police Awards: பொங்கல் அதிரடி..!  3186  காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
TN Police Awards: பொங்கல் அதிரடி..! 3186 காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
Pongal 2025: ஒரே குஷி.. ஊரே பிசி! நாளைக்கு மட்டும் இத்தனை விசேஷமா? Vibeதான்!
Pongal 2025: ஒரே குஷி.. ஊரே பிசி! நாளைக்கு மட்டும் இத்தனை விசேஷமா? Vibeதான்!
Embed widget