மேலும் அறிய

விவசாய நிலங்களை நாசமாக்கும் காட்டுபன்றியை விரட்டுவது எப்படி? - விவசாயிகளே தெரிஞ்சிகோங்க

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், விரிஞ்சிபுரத்தில் இருந்து இயற்கை காட்டுப்பன்றி விரட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் வயல்களில் சம்பா நாற்றங்காலை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனை தடுக்க காட்டுப்பன்றி விரட்டியை பயன்படுத்துமாறு விதை சான்றளிப்பு உதவி இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் மேட்டூர் அணையில் இருந்து குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. 

இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து தாமதமாக மேட்டூர் அணை ஜூலை மாதம் திறக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பல இடங்களில் முன்பட்ட சம்பா நடவுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடிக்கான நாற்றங்கால் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பாய் நாற்றங்கால், நடவுக்கான நாற்றங்கால் போன்றவற்றை தயார் செய்து வருகிறார்கள்.

அதன்படி, தற்போது திருவையாறு, மெலட்டூர், அம்மாப்பேட்டை, பாபநாசம், திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடிக்காக விவசாயிகள் நாற்றங்கால் தயார் செய்துள்ளனர். இதில் குறிப்பாக ஆற்றுப்படுகை, பாசன வாய்க்கால் உள்ள பகுதிகளில் உள்ள புதர்களில் காட்டுப்பன்றிகள் இருந்து கொண்டு அருகில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. குறிப்பாக நாற்றங்கால்களை சேதப்படுத்தி உள்ளதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

தற்போது மாவட்டத்தில் சம்பா விதை விதைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாலும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள விதை நாற்றங்காலை பன்றிகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற விவசாயிகள் மின்சார விளக்குகள், வண்ணத்துணிகளை வயல்களை சுற்றி கட்டியும் உள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், விரிஞ்சிபுரத்தில் இருந்து இயற்கை காட்டுப்பன்றி விரட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த இயற்கை காட்டுப்பன்றி விரட்டியை 1 ஏக்கருக்கு 500 மிலி பயன்படுத்துவதன் மூலம் காட்டுப்பன்றி வருவதைக் கட்டுப்படுத்தலாம். இது குறித்து தஞ்சை மாவட்ட விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், நெல் நடவு அல்லது விதை விதைத்துள்ள வயலை சுற்றியுள்ள வரப்புகளில் 2 அடி உயரமுள்ள குச்சிகளை 10 அடிக்கு 1 குச்சி வீதம் ஊன்ற வேண்டும். அக்குச்சியினை ஒன்றரை அடி உயரத்தில் கம்பி அல்லது சணல் கொண்டு அனைத்துக் குச்சிகளையும் இணைத்து கட்ட வேண்டும். இரண்டு குச்சிகளுக்கு இடையில் சிறிய பிளாஸ்டிக் டப்பா ஒன்றை கட்ட வேண்டும். 

ஒரு ஏக்கருக்கு 100 சிறிய (சுண்ணாம்பு) டப்பா தேவைப்படும். ஒவ்வொரு பிளாஸ்டிக் டப்பாவின் கழுத்துப்பகுதியில் 4 திசைகளிலும் சிறு துளையிட்டு துவாரம் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு டப்பாவிலும் சுமார் 5 மிலி அல்லது 1 தேக்கரண்டி அளவு மருந்தை ஊற்றி முட வேண்டும். இந்த டப்பா சாய்வாக இல்லாதவாறும், மழைநீர் உள்ளே புகாதவாறும் அமைக்கப்பட வேண்டும். டப்பாவினுள் ஊற்றப்பட்ட மருந்தில் இருந்துவரும் வாசனையால் காட்டுப்பன்றி அருகில் வராமல் ஓடிவிடும். இந்தக் காட்டுப்பன்றி விரட்டி தேவைப்படும் 

விவசாயிகள் வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் உள்ள பேராசிரியர் மற்றும் தலைவரை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ (0416-2272221) தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

தலைப்பு செய்திகள்

விவசாயிகளின் உற்ற நண்பனாக மண் வளத்தை காக்க பெரும் பங்கு வகிக்கும் அசோலா 
விவசாயிகளின் உற்ற நண்பனாக மண் வளத்தை காக்க பெரும் பங்கு வகிக்கும் அசோலா 
பழைய மின்மோட்டாரை மாற்றி 4-Star மின்மோட்டார் வாங்க அரசு மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!
பழைய மின்மோட்டாரை மாற்றி 4-Star மின்மோட்டார் வாங்க அரசு மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Embed widget