கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2ஆம் போக சாகுபடிக்கான நெல் விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரம்
முல்லை பெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இரண்டாம் போக சாகுபடிக்கான நெல் விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரம்.
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக இரு போகம் நெல் விவசாயம் செய்யக்கூடிய ஒரே மாவட்டம் தேனி மாவட்டம். தமிழக, கேரளா எல்லையை இணைக்கும் ஒரு முக்கிய மாவட்டமாக பார்க்கப்படுவதும் தேனி மாவட்டம். தேனி மாவட்டத்தின் பிரதான தொழிலாக விளங்குகிறது விவசாயம். இப்பகுதியில் நெல், தென்னை, திராட்சை, வாழை உள்ளிட்ட பயிர்களின் விவசாயம் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. மேலும் காய்கறிகளின் உற்பத்தியும் அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதியின் விவசாயத்திற்கு உயிர்நாடியாக விளங்குகிறது முல்லைப் பெரியாறு அணை. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து பழனிசெட்டிபட்டி வரையில் சுமார் 14,707 ஏக்கர் பரப்பளவில் வருடத்திற்கு இரண்டு போகம் நெல் விவசாயம் செய்து வருவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் ஜூன் 1-ஆம் தேதி கம்பம் பள்ளதாக்கு பகுதி விவசாயத்திற்காக முல்லை பெரியாறு அணையிலிருந்து அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பெறுத்து தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.
CM MK Stalin: கனமழையால் கலங்கிய சென்னை மக்கள்.. துயர் துடைக்க களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின்..!
அதேபோல இந்த மாதம் அதாவது நவம்பர் ஆரம்பத்திலிருந்து இரண்டாம் போகம் நெல் சாகுபடிக்கான பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபடுவார்கள். இந்த நிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து கூடலூர் , கம்பம், காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது இரண்டாம் போக நெல் சாகுபடி செய்வதற்கான நாத்து நடுதல், உழுதல் போன்ற பணிகள் விவசாயிகள் தொடங்கியுள்ளன.
கடந்த இரண்டு வருடங்களில் முல்லை பெரியாறு அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத நிலையிலும் , அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழையின்மையாலும் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் முதல் போக நெல் சாகுபடிக்கான பணிகள் நடைபெறாமல் காலதாமதமாக நடந்தது. இதனால் இரண்டாம் போகம் நெல் சாகுபடி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. பருவ மழை , பருவ சூழல் , நெல் ரகங்கள் மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த இரண்டு வருடமாக இரண்டாவது போகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.
ஆனால் இந்த வருடம் பருவ மழை சரியாக பெய்ததாலும் அணையில் போதிய அளவிற்கு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் இந்த வருடம் இரண்டு போகம் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது என விவசாயிகள் கூறுவதுடன் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.