விவசாயிகளே முக்கிய செய்தி இதோ..! காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
Extension of time to insurance " பயிர் காப்பீட்டு தொகையில் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் காப்பீடு கட்டணமாக சம்பா பருவ நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.512.25 செலுத்தினால் போதுமானது "
விவசாய பெருமக்கள் காப்பீட்டு கால நீட்டிப்பினை பயன்படுத்தி தங்களது நெல் சாகுபடி செய்யப்பட்ட அனைத்து பரப்புகளையும் எந்தவித விடுபாடுமின்றி 22.11.23 க்குள் பயிரினை உடனடியாக காப்பீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாட்டில் 2023-24 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் சம்பா நெல் II (சிறப்பு பருவம்) பயிரை காப்பீடு செய்ய முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த கடைசி தேதி 15.11.2023 முடிவடைய இருந்த நிலையில் தமிழக அரசு மற்றும் விவசாய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று காப்பீட்டு காலம் வரும் 22.11.2023 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாய பெருமக்கள் காப்பீட்டு கால நீட்டிப்பினை பயன்படுத்தி தங்களது நெல் சாகுபடி செய்யப்பட்ட அனைத்து பரப்புகளையும் எந்தவித விடுபாடுமின்றி 22.11.23 க்குள் பயிரினை உடனடியாக காப்பீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சம்பா பயிர் காப்பீடு
செங்கல்பட்டு மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம் பியூச்சர் ஜெனரலி காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது சம்பா நெற்பயிர் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வரும் வேளையில், விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட சம்பா பயிரினை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சம்பா பருவ நெற்பயிர்
தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் நெல் II சம்பா (சிறப்பு பருவம்) காப்பீடு செய்யப்படும் நெற்பயிர் நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடுவான 2023 நவம்பர் 22 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். நெல் (சம்பா) பயிருக்கு பயிர் காப்பீட்டு தொகையில் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் காப்பீடு கட்டணமாக சம்பா பருவ நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.512.25 செலுத்தினால் போதுமானது.
விவசாயிகள் கார்னரில்
எனவே சம்பா பருவங்களில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிரினை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ/தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்)/ தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள ‘விவசாயிகள் கார்னரில்’ (www.pmfby.gov.in) நேரடியாகவோ நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழி விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல் / இ-அடங்கல் / விதைப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொது சேவை மையங்களில் (இ- சேவை மையங்கள்) / தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் / தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.
விவசாயிகள் இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியையோ (www.pmfby.gov.in) அல்லது அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளையோ அல்லது திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தையோ அணுகுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு ராகுல் நாத் கேட்டுக் கொள்ளப்படுகிறது.