(Source: ECI/ABP News/ABP Majha)
தருமபுரி: வத்தல் மலையில் ஊடுபயிராக 350 ஏக்கரில் மிளகு சாகுபடி தீவிரம்
கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் வத்தல் மலைக்கு நேரில் வந்த முதல்வர் மு. க. ஸ்டாலின் வத்தல் மலைக்கு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுத்தார்.
தருமபுரியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் வத்தல்மலை உள்ளது. இது ஏற்காடு, சேர்வராயன் மலைத்தொடரில் ஒரு பகுதியாகும். சுமார் 225 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இந்த மலை காடுகளில் உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்குகள் காட்டெருத்துகள், காட்டு பன்றிகள், ஆடுகள் மற்றும் 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் மற்றும் என்னற்ற மூலிகை தாவரங்களும் உள்ளன. வத்தல் மலையில் சின்னாங்காடு, ஒன்றிய காடு, கு லியனூர், பொட்டலாங்காடு, பெரியரி, நாயக்கனூர், பால் சிலம்பு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.
பூர்வீக குடிகளான 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் இங்கே வசிக்கின்றனர். ஆண்டின் பெரும்பாலான நாட்களில் குறைந்த வெப்பநிலை நிலவி வருவதால் வத்தல் மலையில் சுமார் 350 ஏக்கரில் காபி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் சில்வர் மரங்களில் ஊடு பயிராக மிளகு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆரஞ்சு, சப்போட்டா, எலுமிச்சை, ரோஜா, செண்டு மல்லி, சாமந்தி, மரவள்ளிக்கிழங்கு, சாமை, திணை, கேழ்வரகு போன்றவை பயிரிட்டு வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் வத்தல் மலைக்கு நேரில் வந்த முதல்வர் மு. க. ஸ்டாலின் வத்தல் மலைக்கு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுத்தார்.
மிளகு செடிகள் சில்வர் ஊக் மரங்களில் கொடிகளாக படர்ந்த நிலையில் இருக்கும். கடந்த ஏப்ரல், மே மாத கோடை வெயில் அளவுக்கு அதிகமான வெப்பம் கொளுத்தியதால் மிளகு செடி, கருக தொடங்கின. கடந்த ஒரு மாதமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மிளகு, காப்பியும் செழித்து பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. மிளகு செடி பச்சை பசேல் என்று உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள், வாசனைப் பயிர்களின் அரசன் என்று அழைக்கப்படும் மிளகு கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. அதுவும் கன்னியாகுமரி, நீலகிரி, சேலம், திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களில் மட்டுமே மிளகு உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது தருமபுரி மாவட்டத்தில் சுமார் 350 ஏக்கரில் காபி தோட்டத்தில் ஊடுபயிராக மிளகு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மிளகு வளர்க்க நல்ல நிழலும், தண்ணீரும் தேவை 150 - 750 சென்டிமீட்டர் நிலமும் அதிக அளவு ஈரம் மிதமான தட்பவெப்ப நிலை இந்த வளர்ச்சிக்கு ஏற்றது.
நல்ல வடிகால் வசதி இல்லாத நிறைந்த செங்கரை மண் மிளகு சாகுபடிக்கு ஏற்றதாகும். அறுவடை செய்யப்படும் மிளகை சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர்.
ஏக்கருக்கு 90 செடிகள் வளர்க்கலாம். மிளகுக் கொடி மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. ஒரு மீட்டர் நீளமுள்ள மிளகு கொடியை தாய் கொடியிலிருந்து எடுத்து இரண்டு அல்லது மூன்று கணுக்களுடன் கூடிய சிறு துண்டுகளாக வெட்டி பாலித்தின் பைகளில் நடவு செய்ய வேண்டும். வேர் பிடித்த இந்த துண்டுகளை நடவுக்கு பயன்படுத்தலாம்.
நல்ல நிழல் இருக்க வேண்டும், தண்ணீர் தேங்காமல் இருக்கும் பகுதிகளில் ஒரு மீட்டர் அகலம் 5- 6 மீட்டர் நீளமும் கொண்ட உயர பந்தல் அமைக்க வேண்டும். மண்ணை நன்கு கொத்தி தேவையான தொழிலும் தேவையான உரம், மணல், செம்மண் கலந்த பிரார்த்திகளை திறந்து வைக்க வேண்டும். தாய்க்கொடிகளை அடித்தளத்தில் வளரும் கொடிகளை சின்ன துண்டுகளாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
இவற்றின் பக்கத்தில் ஒரு குச்சியின் அட்டை, ஒரு கொடிகளை மண்ணில் படற விடாமல் குச்சியில் உள்ளுமாறு கட்டி வைக்க வேண்டும். பின்னர் கோடு கொடியில் இருந்து 23 கணக்கு கொண்ட கண்டு துண்டுகளை சீராக கத்தியால் வெட்டி தயாரிக்க வேண்டும். இந்த தண்டு துண்டுகளில் இலையை காம்பை மட்டும் விட்டு பிடிக்க வேண்டும். அதன்பின் பாட்டில்களிலோ அல்லது பாலித்தீன் பைகளிலோ நட வேண்டும்.
ஊடுபயிராக மிளகு சாகுபடி செய்யும்போது சில்வர் ஊக், தென்னை போன்ற பலன் தரும் மரங்களை படர் மரங்களாக பயன்படுத்தலாம். ஏக்கருக்கு சுமார் 900 செடிகள் வளர்க்கலாம். மார்க்கெட்டில் ஒரு கிலோ மிளகு ரூ 540 முதல் 750 வரை விற்கப்படுகிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.