மேலும் அறிய

தேவகோட்டை மாணவர்களுக்கு 5 வகை மரக்கன்றுகள்: பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட நகராட்சி!

சீதாப்பழம், கொய்யா, பலா உள்ளிட்ட பல்வேறு வகைகளைச் சேர்ந்த மொத்தம் 5 மரக்கன்றுகள் அடங்கிய தொகுப்புகள் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டன.

மாணவர்களுக்கு 5 வகை மரக்கன்றுகள் வழங்கி பசுமை விழிப்புணர்வு ஏற்படுத்திய தேவகோட்டை நகராட்சி.

ரக்கன்றுகள் வழங்கும் விழா
 
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில், நகர்ப்புறங்களில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் தேவகோட்டை நகராட்சி சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தேவகோட்டை நகர்மன்றத் தலைவர் சுந்தரலிங்கம் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் , நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், நகர்மன்ற துணைத்தலைவர் ரமேஷ்,சமூக ஆர்வலர் பொன்ராஜ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
விழாவில் நகர்மன்றத் தலைவர் சுந்தரலிங்கம் பேசியதாவது:
 
"மரங்கள் மனித வாழ்க்கையின் ஆதாரமாக திகழ்கின்றன. நாம் வெளியேற்றும் கார்பன் டைஆக்சைடை உள்வாங்கி, உயிர்வாழ அத்தியாவசியமான ஆக்சிஜனை வழங்குகின்றன. மரங்கள் இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதோடு, தூய்மையான காற்று, உணவு, நிழல், மழை வளம் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையையும் உறுதி செய்கின்றன. வீடுகள் மற்றும் சாலையோரங்களில் நடப்பட்ட மரக்கன்றுகள் வறண்டு காணப்பட்டால், குடிநீரை பயன்படுத்துவது போலவே சிறிதளவு தண்ணீரையாவது ஊற்றி அவற்றை பாதுகாக்க வேண்டும். ஒவ்வொருவரும் மரங்களை வளர்த்து பராமரித்தால் தேவகோட்டையை பசுமை நிறைந்த நகரமாக மாற்ற முடியும். இப்பள்ளி மாணவர்கள் மரங்களை வளர்ப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டுவது பாராட்டுக்குரியது. இன்று வழங்கப்படும் மரக்கன்றுகளை நன்கு பராமரித்து வளர்த்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னுதாரணமாக திகழ வேண்டும்," என்றார்.
 
5 மரக்கன்றுகள் அடங்கிய தொகுப்பு
 
இதனைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் நகர்மன்றத் தலைவர் சுந்தரலிங்கம் மற்றும் துணைத்தலைவர் ரமேஷ் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். பின்னர், சீதாப்பழம், கொய்யா, பலா உள்ளிட்ட பல்வேறு வகைகளைச் சேர்ந்த மொத்தம் 5 மரக்கன்றுகள் அடங்கிய தொகுப்புகள் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டன. மரக்கன்றுகளை உற்சாகத்துடன் பெற்றுக் கொண்ட மாணவர்கள், அவற்றை முறையாக வளர்ப்பதாக உறுதியளித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தேவகோட்டை நகராட்சி சுகாதார அலுவலர் பாண்டி செல்வம், சுகாதார ஆய்வாளர் பிருந்தா, உதவியாளர் ஜெகன் மற்றும் நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். ஆசிரியை சிவரஞ்சனி வரவேற்புரையையும், ஆசிரியர் ஸ்ரீதர் நன்றியுரையையும் வழங்கினர். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், நகராட்சி அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மரங்கள் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

தலைப்பு செய்திகள்

சம்பா சாகுபடி செய்துள்ளீர்களா? நவம்பர் 15-க்குள் இந்த ஒரு வேலையை முடிக்காவிட்டால் இழப்பீடு கிடைக்காது!
சம்பா சாகுபடி செய்துள்ளீர்களா? நவம்பர் 15-க்குள் இந்த ஒரு வேலையை முடிக்காவிட்டால் இழப்பீடு கிடைக்காது!
திருவோணம் வட்டாரத்தில் மானியத்தில் எண்ணெய் பனை சாகுபடி: தோட்டக்கலை உதவி இயக்குநர் தகவல்
திருவோணம் வட்டாரத்தில் மானியத்தில் எண்ணெய் பனை சாகுபடி: தோட்டக்கலை உதவி இயக்குநர் தகவல்
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை: (10.10.2026) இன்று உயர்ந்ததா? குறைந்ததா?
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை: (10.10.2026) இன்று உயர்ந்ததா? குறைந்ததா?
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget