மேலும் அறிய

Chengalpattu: தீவனப் பயிர்களை வளர்க்க அரசு தரும் மானியம் - விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்

Fodder Development Programme:  15 எண்ணிக்கையிலான 2 HP திறன் கொண்ட புல் நறுக்கும் கருவிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளது

கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி திட்டம்

செங்கல்பட்டு: அரசு கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் இயங்கும் கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி திட்டம் சார்பில், பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தண்ணீரை குறைவாக பயன்படுத்தி எவ்வாறு வசந்தீவனம் வளர்ப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அதற்கான மானியங்கள் ஆகியவற்றை கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி திட்டம் மூலம் அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பாண்டில் தீவன அபிவிருத்தி திட்டம் மூலம் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில், ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பது பின்வருமாறு :

பல்லாண்டு தீவனப் புல் வகை

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பாண்டில் தீவன அபிவிருத்தி திட்டம் – 2023-24-ன் கீழ் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் நீர்ப்பாசன வசதி கொண்ட தென்னை மற்றும் பழத்தோட்டத்தில் 0.5 ஏக்கர் முதல் 1 ஹெக்டர் பரப்பளவில் தீவன பயிர்களான தீவனச் சோளம், கம்பு நேப்பியர், ஒட்டுப்புல் பயிர் வகைகள் பல்லாண்டு தீவனப் புல் வகைகளில் ஏதேனும் ஒன்றை ஊடுபயிராக பயிரிட்டு 3 வருட காலம் பராமரிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.3000 முதல் 1 ஹெக்டேருக்கு ரூ.7500 வரை மானியமாக வழங்கப்படவுள்ளது. 

 50 சதவீத மானியம் வழங்கப்படும்

மேலும் தீவன விரயத்தை குறைப்பதற்காக 15 எண்ணிக்கையிலான 2 HP திறன் கொண்ட புல் நறுக்கும் கருவிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளது.  இதில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் குறைந்த பட்சம் 2 கால்நடைகள் மற்றும் 0.5 ஏக்கர் நிலப்பரப்பில் தீவன சாகுபடி செய்தல் மற்றும் மின்சார வசதி உடையவர்களாகவும் இருக்க வேண்டும்.

இதை பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன  

இத்திட்டத்தின் பயனாளிகள் கடந்த பத்தாண்டுகளில் இதுபோன்ற அரசு திட்டங்களில் பயன் பெற்றவராக இருக்க கூடாது. சிறு,குறு விவசாயிகள், பெண்கள், SC/ST பிரிவினரும் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம விவசாயிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.  பயனாளிகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் தேர்வு செய்யப்படுவார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் தீவன அபிவிருத்தி திட்டத்தில் பயன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கு 15.07.2023 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை செங்கல்பட்டு மாவட்ட கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அந்த அறிவுப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget