மேலும் அறிய
Advertisement
குறைந்த சம்பா நெல் சாகுபடி ; எள், கடலை, உளுந்தை சாகுபடி செய்யும் விவசாயிகள்
80 கிலோ கொண்ட ஒரு மூட்டை நிலக்கடலை பருப்பு ரூ.6,500 முதல் ரூ.8 ஆயிரம் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு சம்பா நெல் சாகுபடி குறைந்த நிலையில் விவசாயிகள் எள், கடலை, உளுந்து, பயறு ஆகியவற்றை அதிகம் சாகுபடி செய்துள்ளனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிர் என்றால் அது நெல்தான். குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகமும் விவசாயிகள் நெல் சாகுபடிக்கே முக்கியத்துவம் அளிப்பார்கள். குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்படும். நடப்பாண்டும் மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் போதிய மழை இல்லாதது, காவிரியில் தண்ணீர் வராதது போன்ற காரணங்களால் குறுவை சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டன.
மேலும் சம்பா சாகுபடி செய்ய விவசாயிகள் முன் வரவில்லை. தண்ணீர் வசதி அதாவது பம்ப் செட் வைத்திருந்த விவசாயிகள் மட்டும் சம்பா சாகுபடியை மேற்கொண்டனர். இதனால் சம்பா சாகுபடி பரப்பளவு குறைந்தது. இந்நிலையில் விவசாயிகள் எள், உளுந்து, பயறு, நிலக்கடலை போன்றவற்றை அதிகளவில் சாகுபடி செய்தனர். அப்படி சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை
அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மேலும் சம்பா சாகுபடி செய்ய விவசாயிகள் முன் வரவில்லை. தண்ணீர் வசதி அதாவது பம்ப் செட் வைத்திருந்த விவசாயிகள் மட்டும் சம்பா சாகுபடியை மேற்கொண்டனர். இதனால் சம்பா சாகுபடி பரப்பளவு குறைந்தது. இந்நிலையில் விவசாயிகள் எள், உளுந்து, பயறு, நிலக்கடலை போன்றவற்றை அதிகளவில் சாகுபடி செய்தனர். அப்படி சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை
அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல், பருத்தி சாகுபடிக்கு அடுத்தபடியாக நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நிகழாண்டு சம்பா, தாளடி நெல் சாகுபடிக்கு போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால், பெரும்பாலான விவசாயிகள் நிலக்கடலை சாகுடியை மேற்கொண்டனர்.
அதன்படி, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவோணம் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டது. இதற்காக கடந்த டிசம்பர் ஜனவரி மாதங்களில் நிலக்கடலை விதைக்கப்பட்டு, தற்போது அறு வடை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதில், நிலக்கடலையை செடியிலிருந்து பிரித்து எடுக்க விவசாயத் தொழிலாளர்களுக்கு பதிலாக இயந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு பாய்ண்ட்க்கு ரூ.200 என கொடுத்து இயந்திரங்களில் நிலக்கடலையை பிரித்து எடுக்கின்றனர்.
பிரித்து எடுக்கப்பட்ட நிலக்கடலையை விவசாயிகள் தஞ்சாவூர், கொல்லாங்கரை, கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் அரவை ஆலைகளுக்கு கொண்டு சென்று, அங்கேயே கடலையை உடைத்து பருப்பை ஆலை உரிமையாளரிடமே விற்கின்றனர்.
ஆனால், 80 கிலோ கொண்ட ஒரு மூட்டை நிலக்கடலை பருப்பு ரூ.6,500 முதல் ரூ.8 ஆயிரம் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து நிலக்கடலை பயிரிட்ட விவசாயிகள் தரப்பில் கூறுகையில், இந்தாண்டு மேட்டூர் அணையிலிருந்து போதிய தண்ணீர் திறந்து விடாத காரணத்தால் அதிகளவில் நிலக்கடலையை விவசாயிகள் பயிரிட்டனர்.
விதை, களை எடுப்பு, உரம் என ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவானது. மேலும் களை எடுப்புக்கு ஆள் இல்லாமல் சில நேரங்களில் பெரும் அவதி ஏற்பட்டது. தற்போது நிலக்கடலை அறுவடை நடைபெறுகிறது. போதிய மழை இல்லாத காரணத்தால் நிலக்கடலை மகசூலும் குறைந்துள்ளது. விளைந்த நிலக் கடலையை தனியார் அரவை ஆலைகளுக்கு கொண்டு சென்றால், அங்கு குறைந்த விலையிலேயே கொள்முதல் செய்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
ஆன்மிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion