மயிலாடுதுறையில் கனமழையால் அழுகிய இஞ்சி செடிகள் - பெரும் இழப்பை சந்தித்த விவசாயிகள்
மயிலாடுதுறை அருகே கனமழையால் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள இஞ்சி செடிகள் அழுகியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
தமிழர் திருநாளாக கருதப்படும் பொங்கல் பண்டிகை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உற்சாகமாக கொண்டாடப்படும் முக்கிய விழாவாகும். இந்நாளில் புதிய மண் பானையில் மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து கட்டி மண் அடுப்பில் புத்தரிசி, வெல்லம் போட்டு பொங்கலிடுவர். பொங்கல் பண்டிகைக்கு கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து ஆகியன முக்கியமானவை ஆகும். மேலும் இஞ்சி கொத்து பசுமையாக கட்ட வேண்டும் என்பதற்காக பொங்கலுக்கு முதல் நாளில் இருந்து விற்பனைக்கு வரும்.
Pongal TV Movies:“லியோ முதல் ஜவான் வரை“.. டிவியில் என்னென்ன பொங்கல் புதுப்படங்கள் தெரியுமா?
பொங்கல் பண்டிகையின்போது, பாரம்பரிய முறைப்படி வீடுகள் தோறும் பானையில் மஞ்சள் கொத்தும், இஞ்சி கொத்தும் கட்டி பொங்கல் பொங்கி வைத்து செங்கரும்பு வைத்து படையலிட்டு சூரியனை வழிபடுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான கரும்பு, மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்துகள் பயிடப்பட்டு அறுவடை செய்ய தயார் நிலையில் உள்ளது.
NEET PG Exam: மாணவர்களே தயாரா இருங்க! ஜூலை 7-ல் முதுநிலை நீட் தேர்வு - வெளியான முக்கிய அறிவிப்பு!
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சேண்டிருப்பு கிராமத்தில் 10 ஏக்கரில் இஞ்சி பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக பெய்து வரும் கனமழையால் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் உள்ள இஞ்சி செடிகள் அழுக தொடங்கியுள்ளது. அறுவடை செய்யும் நிலையில் இருந்த இஞ்சி கொத்துகளின் இலைகள் பழுப்பு நிறமாகி வேர்கள் அழுகியுள்ளன. வெட்டி எடுக்க வேண்டிய இஞ்சிகள் கையோடு பெயர்ந்து வருகிறது.
ஏக்கருக்கு ரூபாய் 1 லட்சத்திற்குமேல் செலவு செய்து 10 மாதம் வளர்ந்து அறுவடை செய்ய வேண்டிய நிலையில் தற்போது பெய்யும் கனமழையால் பல ஏக்கரில் உள்ள இஞ்சி செடிகள் கொத்துகள் அழுகியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். உடனடியாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் இந்த பாதிப்பினை ஆய்வு செய்து தமிழக அரசிடம் உரிய நிவாரணம் பெற்றுதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Watch Video: மறைந்த அப்பாவின் கனவை நிறைவேற்றிய சன் டிவி சீரியல் நடிகை.. வாழ்த்தும் ரசிகர்கள்!