Karur: தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஏமாற்று வேலையா..? முறையாக பணி வழங்க பொதுமக்கள் கோரிக்கை!
மின்னாம்பள்ளி ஊராட்சி இங்கு வசிக்கும் பொது மக்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் முறையாக பணி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. 80 நாட்களுக்கு மட்டும் பணி வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கரூர் அருகே 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் முறையாக பணி வழங்க கோரி நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் ஒன்றிய குழு அலுவலக அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
கரூர் அருகில் உள்ள மின்னாம்பள்ளி ஊராட்சி இங்கு வசிக்கும் பொது மக்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் முறையாக பணி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மின்னாம்பள்ளி ஊராட்சியை சேர்ந்த 100 க்கும் அதிகமான பொதுமக்கள் திரண்டு கரூர் வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
கிராமப்புறங்களில் வேறு வேலை இல்லாத காரணத்தால் ஊரக வேலை உறுதி திட்டத்தை நம்பி உள்ளதாகவும் 150 நாள் வேலை நாட்களை முறையாக வழங்க கோரியும் அவர்கள் முறையிட்டனர். கரூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பாலமுருகன் அதிகாரிகளிடம் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Join Us on Telegram: https://t.me/abpdesamofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.