Goondas act : குண்டர் சட்டம் - யார் மீது பாயும் ?
பொதுவாக செய்திகளை படிப்போர்கள் குற்றம் தொடர்பான் செய்திகளை விரும்பி படிப்பார்கள். குற்றச்செய்திகளில் கைது, விடுதலை, ஜாமீன் என்று பல வார்த்தைகள் வரும். அத்துடன் கைது செய்யப்பட்டவர்கள் மீது இந்த சட்டம் பாய்ந்துள்ளது என்றெல்லாம் வரும். இதில், குண்டர் சட்டம் என்று செய்திகளில் படிப்போர், அது என்ன என்பது குறித்து சிலருக்கு தெரியாமல் இருக்கும். அவர்களுக்காக குண்டர் சட்டம் என்றால் என்ன? அதன் அதிகார வரம்புகள் என்ன? குண்டர்கள் என்பவர்கள் யார்? குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டோருக்கு உள்ள வாய்ப்புகள் என்ன? என்பது குறித்து பார்ப்போம். தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், வனக்குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், கள்ளச்சாராயம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடும் சமூக விரோதிகளை கைது செய்து அதன் மூலம் அமைதியை நிலைநாட்டுவதற்கு என்றுக் கூறி 1982-இல் தமிழக அரசால் இயற்றப்பட்டதுதான் குண்டர் தடுப்புச் சட்டம் எனப்படும் தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம். இது 12-03-1982 அன்று இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றாலும், 5-01-1982 அன்று முதல் செயல்பாட்டிற்கு வந்ததாக கருதப்படும்.