Breast Cancer Awareness : ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய்!தற்காத்துக்கொள்வது எப்படி?மருத்துவர் WARNING
விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனையில் மார்பக புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிங்க் நிற குடைகள் மருத்துவமனை வளாகத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. மார்பக புற்றுநோய் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்த மருத்துவர்கள் இதுபோன்ற விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர்.
மார்பக புற்று நோயால் ஆண் பெண் இருபாலரும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மார்பக புற்று நோயை ஆரம்பித்திலையே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் முழுமையாக குணபடுத்திவிடலாம் ஆனால் கிராமபுறங்களில் மார்பக புற்று நோய் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் அரசு மருத்துவ துறை சார்பில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனையாக முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவமனையில் அனைத்து மருத்துவ துறை சார்பில் மார்பக புற்றுநோய் குறித்து பொதுமக்கள் நோயாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு மருத்துவமனை வளாகத்தில் பிங் நிற குடைகள் தொங்க விடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகின்றன. குடையின் நிழலாக அனைத்து மருத்துவ துறை உட்பிரிவுகள் சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம் என்பதை காட்டும் விதமாக பிங்க நிறத்தில் குடைகள் தொங்கவிடப்பட்டுள்ளதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் புற்று நோயால் பாதிப்பு என்பது அதிகரித்து வருவதாகவும் கடந்த ஆண்டு 120 பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு தற்போது 200 ஆக உயர்ந்துள்ளதாகவும், ஆண்கள் ஐந்து பேர் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆண்களுக்கு மார்பகத்தில் கட்டி ஏற்பட்டால் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என்றும் முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவமனை மார்பக புற்று நோய்க்கு தனியார் மருத்துவமனைக்கு இணையாக சிகிச்சை அளிப்பதாக கதிரியக்க துறை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.





















