Komban jagan | கொம்பனுக்கு ஆதரவாக ரீல்ஸ்! நேரில் பாடமெடுத்த SP! குவியும் பாராட்டு! Trichy rowdy
திருச்சி எஸ்பி க்கு கொலை மிரட்டல் - பிடிபட்ட மூன்று சிறார்களின் பெற்றோர்களுக்கு அட்வைஸ் செய்து அனுப்பிய எஸ்பி
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்க்கு கொலை மிரட்டல் பிடிபட்ட மூன்று சிறார்களின் பெற்றோர்களுக்கு அட்வைஸ் செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார்
திருச்சியில் கடந்த நவம்பர் 22ஆம் தேதி பிரபல ரவுடியும் ஏ ப்ளஸ் குற்றவாளியாக இருந்த கொம்பன் ஜெகன் போலீஸ் என்கவுண்டர் செய்தனர்..
கடந்த வாரம் இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில், "கொம்பன் ஜெகன் டீம் (Komban_jegan_team)" என்ற முகவரியில் இருந்து, திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், புகைப்படத்தை பகிர்ந்து, அத்துடன் "விரைவில் தலைகள் சிதறும்" என "Komban Brothers" என்ற பதிவை பகிர்ந்து பொதுமக்கள் மத்தியில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், கலவரங்களை தூண்டும் விதத்திலும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக, தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், மேற்படி இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவேற்றம் செய்தது 16 வயது சிறுவன் என தெரியவந்தது. இதன் அடிப்படையில், மேற்படி இளஞ்சிறார் என்பவர் மீது, வாத்தலை காவல் நிலைய குற்ற எண்- 69/24, சட்டபிரிவு 153(В), 505(2) IPC r/w 66(D) IT Act-21 09.06.2024- வழக்கு பதிவு செய்து செய்யப்பட்டு, மேற்படி நபரை அழைத்து விசாரணை செய்தபோது, 17 வயது சிறுவன் மற்றும் தென்காசி மாவட்டம், ஆகிய ஒருவருக்கும் தொடர்பு உள்ளது தெரியவந்தது.
மேற்படி மூவரும் இளஞ்சிறார்கள் என்பதால், சமூக வலைத்தளங்களில் அச்சுறுத்தும் வகையில் பதிவிடாமல், கவனமாக கையாள வேண்டுமென கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பப்பட்டனர். மேலும், இதில் சம்மந்தப்பட்ட 17 வயதுடைய நபரை தேடிவருகின்றனர்.
இதுபோன்று, பொதுமக்கள் மத்தியில் கலவரம், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மூன்று சிறார்கள் பெற்றோர்களை எஸ் பி அழைத்து அறிவுரை வழங்கினார். முன்னதாக மூன்று சிறார்கள் வழக்கு பதிவு செய்து அறிவுரையுடன் எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று நேரடியாக இந்த செயலில் ஈடுபட்ட சிறார்களின் பெற்றோர்களிடம் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இதுபோன்ற செயல்களை தங்களது பிள்ளைகளை ஈடுபடாமல் வைப்பதற்கு நல்வழியை காட்டுங்கள் என அறிவுரை செய்தார்.
பின் குறிப்பு: இதில் உள்ளவர்கள் முகத்தை மறைக்கவும்