மேலும் அறிய

Woman Murder: சிறுநீர் கழித்த பெண் வியாபாரி! வெட்டிக் கொன்ற ரவுடி! சென்னையில் பகீர்!

சென்னை திருவொற்றியூரில், காய்கறி கடை நடத்தி வந்த பெண் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடுக்க முயன்ற அவரது கணவருக்கும் தலையில் சரமாரி வெட்டு விழுந்துள்ளது. வெட்டிவிட்டு தப்பியோடிய நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணாயில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவை சேர்ந்தவர் மாரி. இவரது மனைவி கௌரி. இவர்கள் இருவரும் அதே பகுதியில் சாலையில் காய்கறிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் னேற்று இவர்களது கடைக்கு வந்த நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கணவன், மனைவி இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த கௌரி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். மேலும் மாரிக்கு தலை மற்றும் கையில் கத்தியால் வெட்டியதில் காயம் ஏற்பட்டது. இருவரையும் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற கொலையாளியை அக்கம்பக்கத்தினர், சுற்றி வளைத்துப் பிடித்து, திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கொலையாளியை கைது செய்தனர். பலியான கௌரியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மாரியை சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் கௌரியையும், மாரியையும் வெட்டிய நபர் அதே பகுதியைச் சேர்ந்த சேகர் என்பது தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட கௌரிக்கும், கொலையாளிக்கும் 10 நாட்களுக்கு முன்பு ஒரு தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சேகர் வழக்கமாக தூங்கும் இடத்தில், கௌரி கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சேகர், கௌரியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு கௌரி அவரை தனது செருப்பை கழற்றி அடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், னேற்று கௌரியின் கடைக்கு வந்த சேகர், கௌரி மற்றும் மாரியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில், ஆத்திரத்தில் சேகர் கௌரியை சரமாரியாக வெட்டியுள்ளார். மேலும் தடுக்க வந்த அவரது கணவரையும் தலை மற்றும் கையில் வெட்டியுள்ளார். தொடர்ந்து, இந்தக் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சேகரை கைது செய்த போலீசார், கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கொலை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு வீடியோக்கள்

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்
மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி! திருப்பூர் விரையும் போலீஸ்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget