TVK | ’’மாதம் 5000..மருத்துவ காப்பீடு! பட்டப்படிப்பு வரை இலவச கல்வி’’ உதவிக்கரம் நீட்டிய மரிய வில்சன்
கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களை நேரில் சந்தித்து கல்வியாளர் மரிய வில்சன் சார்பில் ஜேப்பியார் கல்வி குழுமத்தினர் வங்கி விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த குடும்பங்களுக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு, மாதம் 5000 ரூபாய் வழங்கப்படும் என கல்வியாளர் மரிய வில்சன் அறிவித்தார். இந்த நிலையில், கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவரது குழுவினர் வங்கி விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த ஜேப்பியார் குழுமத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். ஜேப்பியார் குழுமத் தலைவர் தவெகவை சேர்ந்த மரிய வில்சன் சார்பாக உயிரிழந்த 41 பேர் குடும்பத்தினருக்கு நடப்பு மாதம் முதல் 20 ஆண்டுகளுக்கு மாதம் 5,000 ரூபாய் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
அடுத்த 20 ஆண்டுகளுக்கு கட்சி சார்பில் மருத்துவ காப்பீடு, உயிரிழந்தவர்களின் வாரிசுகள் அவர்கள் விரும்பும் படிப்புகளை படிக்க ஆகும் செலவும் ஏற்கப்படும் என்று மரிய வில்சன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.





















