Chengalpattu : கலெக்டர் பெயரில் fake அகவுண்ட்..ராஜஸ்தான் சிறுவனால் அதிர்ந்த போலீஸ்
Chengalpattu : செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக ராகுல் நாத் பணியாற்றி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு, முன்பு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் புகைப்படத்தை எடுத்து மர்ம நபர் ஒருவர் ஃபேஸ்புக்கில் போலி கணக்கு உருவாக்கி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் நண்பர்களிடம் பணம் கேட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு அவர்களுடைய நண்பர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், உடனடியாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தன்னுடைய பெயரில், போலி கணக்கு ஒன்றை துவங்கி தன்னுடைய நண்பர்களிடம், பணம் கேட்கிறார்கள் என செங்கல்பட்டு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் காவல்துறை நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்ததால், காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான 6 பேர் கொண்ட தனிப்படை அமைத்து ராஜஸ்தான் மாநிலம் சென்று முகமத் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்பவரை கைது செய்தனர்.