Arun IPS | அடுத்தடுத்த ENCOUNTER நடுங்கும் ரவுடிகள்..அலறவிட்ட அருண் IPS
ரவுடிகளுக்கு எப்படி சொன்னா புரியுமோ அப்படி சொல்லி புரியவைப்பேன் எனக்கூறி பொறுப்பேற்ற அருண் ஐபிஎஸ்
பதவியேற்ற இரண்டே மாதத்தில் இரண்டு பெரிய என்கவுண்டர்…ஒட்டுமொத்த சென்னையையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்து அனைவரின் அப்லாஸையும் பெற்றுவிட்டார்..
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையை அடுத்து சென்னை கமிசனர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு அருண் ஐபிஎஸ் புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டார். பிரச்சனை என்றவுடனே அருண வர சொல்லுங்க என்று சொல்லும் அளவுக்கு முதல்வர் ஸ்டாலினின் குட்புக் லிஸ்டில் உள்ளவர்..அந்த அளவுக்கு அருணின் ஹிஸ்டரி பயங்கர ஸ்ட்ராங்.
சென்னை கமிஷனராக பதவியேற்ற உடனேயே தனது ஆக்ஷனை தொடங்கி அதிரடி காட்டினார் அருண்.
சட்ட ஒழுங்கில் சென்னை முதன்மை நகரமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில புதிய நடைமுறைகளை கொண்டு வந்தார்.. பொதுவா ஒரு குற்ற சம்பவம் நடந்தாலோ ஒரு பிரச்சனைனாலோ சம்பவ இடத்துக்கு அந்த பகுதி போலீசார் போறது தான் வழக்கம்..ஆனா இனி பிரச்சனைனு வந்துட்டா ஒட்டுமொத்த சென்னையும் நம்ம கண்ட்ரோலுக்கு வரணும்னு போலீசாருக்கு ஆர்டர் போட்டார்.
ஆம்ஸ்ட்ராங் வழக்குக்காக சென்னை வந்த அருண், கொலை செஞ்ச ரவுடி எப்படி தப்பிச்சாங்க அதுவும் ஆயுதங்களோட அப்டினு முதல்ல ஆய்வு செஞ்சுருக்காரு. அப்பதான் ஒரு பெரிய கொலை பன்னிட்டு ஈஸியா தப்பிச்சு போற அளவுக்கு நம்ம அசால்ட்டா வேலை பாத்துட்டு இருக்கோம்றத உண்ர்ந்த அருண்..அதை உடனடியா சரி செய்ய சில நடவடிக்கைகளை மேர்கொண்டிருக்காரு.
அதுபடி தீவீரவாத செயல்களுக்கு ரெட் அலர்ட், ரவுடி கொலை அல்லது முக்கிய பிரமுகர் கொலைக்கு யெல்லோ,, செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு ஆரஞ்ச் அலர்ட்னு பிரச்சனைகளோட இண்டன்சிட்டிக்கு ஏத்த மாதிரி போலீசுக்கு அலர்ட் பண்ணி சம்பந்தபட்ட பகுதியை அந்த பகுதி போலீஸ் மட்டும் கவர் பண்ணாம ஒட்டுமொத்த காவல்துறையும் கவர் பண்ணி கண்ட்ரோலுக்கு கொண்டு வர மாதிரி பண்ணிருக்காரு..
இவரோட ஆக்ஷனுக்கு ரியாக்சனா சில நாட்களிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குல முக்கிய குற்றவாளியா கருதப்பட்ட ரவுடி திருவேங்கடத்த போலீசார் என்கவுண்டர் பண்ணி அதிரடி காட்டினாங்க. இந்த என்கவுண்டர் மத்த ரவுடிகளுக்கு ஒரு பயத்த கொண்டு வந்துச்சு. அதுமட்டும் இல்லாம க்ரைம் ரெக்கார்டுல இருக்குற ரவுடிகளோட லிஸ்ட் எடுத்து அவங்க தொடர்ந்து கண்காணிச்சிட்டு வந்தது மட்டுமில்லாம அவங்க வீட்டுக்கே போய் எச்சரிக்கை விடுத்தாரு அருண் ஐபிஎஸ்..
இப்படி தொடர்ந்து அதிரடி காட்டி வந்தாரு கமிஷனர் அருண்..இந்நிலையில் இன்னைக்கு சென்னைல அடுத்த ரவுடி என்கவுண்டர்.. 25 கொலை வழக்குகள் உட்பட 59 வழக்குகள் நிலுவையில் உள்ள காக்கத்தொப்பு பாலாஜி இன்று காலை வியாசர்ப்பாடியில் வைத்து போலீசாரார எண்கவுண்டர் செஞ்சிருக்காங்க..வடசென்னைல முக்கிய ரவுடியா கருதப்படுற காக்கா தோப்பு பாலாஜியையும் ரொம்ப நாளாவே இந்த ரவுடியையும் அருண் ஐபிஎஸ் ரேடார்ல வச்சிருந்ததா சொல்லப்படுது..
சென்னையை ரவுடிகள் இல்லா நகரமா மாத்தனுமுனு சபதம் எடுத்துட்டாரோ என்னவோ..ஒவ்வொரு ரவுடிக்கா ஸ்கெட்ச் போட்டு தூக்கிட்டு இருக்காரு அருண்..அடுத்தது யாரா இருக்கும்..நம்மளா இருக்கக்கூடாதுன்ற பயத்த ரவுடிகளுக்கு உருவாக்கி நடுங்க வச்சிட்டாரு சென்னை கமிஷனர் அருண்..