Salem Doctor fight | "உங்க வீட்டு வேலைக்காரனா?” POLICE-ஐ தள்ளிவிட்ட மருத்துவர்! கடும் வாக்குவாதம்
கைதிகளுக்கு சிகிச்சை பார்க்க மறுத்த அரசு மருத்துவர் காவலரிடம் வாக்குவாதம் செய்து அவரை செல்போனை பிடுங்குவதற்காக தள்ளிவிட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சேலம் அயோத்தியாபட்டினத்தை சேர்ந்த பீரோ பட்டறை உரிமையாளர் சரவணன் காரில் சென்ற போது ஆறு பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது. பனங்காடு பேருந்து நிறுத்தம் அருகே பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஆறு பேரை சேலம் காரிப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது பணியிலிருந்த மருத்துவர் செந்தில்குமார் ஆறு கைதிகளுக்கு மருத்துவம் பார்க்க முடியாது என சொல்லி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் செல்போனில் பேசிக் கொண்டே, காவலரிடன் செல்போனை பிடுங்க முயன்றார். செல்போனில் பதிவு செய்யக் கூடாது என அவரை தள்ளிவிட்டு, ஒருமையில் பேசியதால் வாக்குவாதம் முற்றியது. பணியில் இருக்கும் காவலரை அவமரியாதை செய்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் குரல் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் செந்தில்குமார் ஏற்கனவே ஏற்காடு அரசு மருத்துவமனையில் மதுபோதையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.