Puducherry Dog |சசிகலா வயசுக்கு வந்தாச்சு நாய்க்குட்டிக்கு மஞ்சள் நீராட்டு புதுச்சேரியில் சுவாரஸ்யம்
பொதுவாகவே செல்லப்பிராணியை வளர்ப்பவர்கள் அதனை தங்கள் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினரை போலவே நடத்துவார்கள், அந்த வகையில் புதுச்சேரியில் தங்களின் வளர்ப்பு நாய் வயதுக்கு வந்ததை அடுத்து அதற்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய நிகழ்வு புதுச்சேரியில் அரங்கேறியுள்ளது.
புதுச்சேரி வாழைக்குளம் பகுதியில் வசிக்கும் அருண் சத்யா தம்பதியினர். இவர்கள் சசிகலா என்ற நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார்கள்.
அந்த செல்லப்பிரானிக்கு 11 மாதம் வயதான நிலையில் அந்த நாய்க்குட்டி வயதுக்கு வந்து விட்டது என்று தெரிந்தவுடன் அதற்கு மஞ்சள் நீராட்டு விழா கொண்டாட முடிவு செய்தனர்.
நாய்க்கு அலங்காரம் செய்து பூ, பொட்டு வைத்து அலங்காரம் செய்தனர். மேலும் முறைப்படி தாய் மாமன் செல்லப்பிராணி சசிகலாவிற்கு மாலை அணிவித்து சீர் செய்தார். உறவினர்கள் என அனைவரும் சசிகலாவிற்கு நலங்கு வைத்து வடை,புட்டு, ஜாங்கிரி, கொழுக்கட்டை, பூ,என பெண்கள் வயதிற்குக் வந்தால் எப்படி மஞ்சள் நீராட்டு விழா நடைப்பெறுமோ அதே போல் இந்த சசிகலா நாய் குட்டி வயதிற்கு வந்ததை விழாவாக நடத்தி மகிழ்ந்தனர்.
ஒரு பெண் வயதுக்கு வந்தால் எப்படி மஞ்சள் நீராட்டு விழா கொண்டாடுவார்களோ அந்த அளவிற்கு ஒரு செல்லப்பிராணிக்கு மஞ்சள் நீராட்டு விழா கொண்டாடியது பார்க்கும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.




















