Priest Controversy Speech | ’’தாமரை மலர வேண்டும்’’கோயில் குருக்கள் சர்ச்சை பேச்சு வைரல் வீடியோ
நாகையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் குருக்கள் ஒருவர் பக்தர்களிடம் தாமரை மலர வேண்டும் என பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வீடியோ வெளியாகி சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.
நாகை மாவட்டம் சிக்கல் பகுதியில் சிங்காரவேலர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவில் குருக்கள் ஒருவர்,
பெங்களூரில் இருந்து வந்த பக்தர்களிடம் அம்மன் தாமரை மலர் போன்றவள் என்றும், உங்கள் உள்ளத்திலும் தாமரை மலர வேண்டும் என்றும் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளார். தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் குருக்கள் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. இதனையடுத்து இடதுசாரி அமைப்புகள் இச்சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நாகையில் அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் குருக்கள் ஒருவர் பக்தர்களிடம் தாமரை மலர வேண்டும் என பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வீடியோ வெளியாகி சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.





















