Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!
ஆதவ் அர்ஜூனாவின் புத்தக வெளியிட்டு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொள்வர்கள் என்று எதிர்ப்ப்பார்க்கப்பட்டது. இதனால் இந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொள்வது கேள்விக்குறியாக இருந்து வந்த நிலையில், தற்போது தவெக தலைவர் விஜய் கலந்துக்கொள்வார் என்பதை விசிக தலைவர் திருமாவளவனே உறுதி செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சென்னையில் வருகிற டிசம்பர் 6ஆம் தேதி ஆதவ் அர்ஜூனா தொகுத்துள்ள புத்தகத்தை திருமாவளவன் வெளியிட விஜய் பெற்றுக்கொள்ளும் வகையில் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் மற்றும் விசிக தலைவர் திருமாவுடன் ஒரே மேடையில் அமர்வது தற்போது உறுதியாகியுள்ளது.
ஏற்கெனவே திருமாவளவன் பிறந்த நாளுக்கு தொலைபேசி மூலம் விஜய் வாழ்த்து சொன்னது, விஜயின் மாநாட்டிற்கு முதல் ஆளாக திருமாவளவன் வாழ்த்துச் சொல்லியது என இருவருக்குள்ளும் பரஸ்பரம் நட்பு இருந்து வரும் நிலையில், இருவரும் முதன்முறையாக பொதுவெளியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கவிருப்பது அரசியல் களத்தில் தற்போது பேசுபொருளாக மாறியிருந்தது.
இதனால் விசிக திமுக கூட்டணியில் விரிசல் உண்டாகுமோ என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பிய நிலையில் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்றும் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில் நான் விஜயுடன் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதை "மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு சிலர் பேசுகிறார்கள்". கட்சி சார்பறற ஒரு நூல் வெளியீட்டு விழாவிற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிப்பதும், நம்மீது சந்தேகத்தை எழுப்பி நமது நம்பகத்தன்மையை நொறுக்கிட முயற்சிப்பதும் மிகுந்த
அதிர்ச்சியளிக்கிறது. இது திட்டமிட்ட சூது! சனாதன சூழ்ச்சி! உணர்ச்சிகளைத் தூண்டி நம்மை நிலைகுலைய வைக்கும் சதிநிறைந்த முயற்சி!
மக்கள்நலன் மற்றும் நாட்டுநலன் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு தொலைநோக்கோடு திமுக உள்ளிட்ட தோழமைகளோடு கைகோர்த்து நாமே உருவாக்கிய "மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி" ஆகியவற்றை நாம் ஏன் சிதறடிக்க வேண்டும்?இது நம்மை மிக மிகப் பலவீனமானவர்களாகக் மதிப்பீடு செய்வோரின் நஞ்சு நிறைந்த மிகவும் கேடான ஒரு மனோநிலையாகும் என இந்த் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
என்ன தான் திருமா இதற்கு விளக்கம் தெரிவித்திருந்தாலும் விஜயுடன் திருமா ஒரே மேடையை பகிரப்போவது திமுகவினர் எரிச்சலடைய வைத்துள்ளது. எனினும் விசிக தரப்பில் அரசியல் மற்றும் வெளி நிகழ்ச்சிகளை பிரித்துபார்க்க வேண்டும், திமுக கூட கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் பாஜக எப்படி கலந்துப் கொண்டதோ அதே போல இதையும் விசிகவினர் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பதிலடி கொடுத்துவருகின்றனர்.