"தவெக விஜய் WASTE! எதுக்கு மன்னிப்பு கேட்டீங்க” வம்பிழுக்கும் வைஷ்ணவி
தவெக விஜய் வேஸ்ட் என அட்டாக் செய்துள்ளார் திமுகவின் வைஷ்ணவி. அவர் எதற்காக அழுதார்? யாரிடம் மன்னிப்பு கேட்டார் என சொல்லவே இல்லையே என்று விஜய்யை வம்பிழுத்துள்ளார்.
கரூர் தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் சம்பவத்தன்று விஜய்யும் பிற தவெக முக்கிய நிர்வாகிகளும் அங்கிருந்து அப்ஸ்காண்டானது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன்பிறகும் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்கவில்லை.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் சொன்ன விஜய், உங்களையெல்லாம் நேரில் வந்து சந்திப்பேன் என உறுதி கொடுத்தார். விஜய் மக்களை சந்திப்பதற்கு முன்பாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிவாரண தொகை 20 லட்சம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்குகளுக்கு கிரெடிட் ஆனது.
இந்தநிலையில் விஜய் கரூருக்கு செல்லாமல், அதற்காக மாறாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையெல்லாம் மாமல்லபுரத்திற்கு வரவைத்து ஆறுதல் சொல்லி விமர்சன வலையில் சிக்கியுள்ளார். ஊடகங்களுக்கு இந்த நிகழ்ச்சியின் போது அனுமதி மறுக்கப்பட்டது. நான் உடைந்து போய் விட்டேன் என்னால் அழுகையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியவில்லை என விஜய் கண்ணீர் விட்டு கதறியதாகவும் தகவல் வெளியானது. விஜய் மன்னிப்பு கேட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் எதற்காக மன்னிப்பு கேட்டார் என்ற கேள்வியும் வந்தது.
இந்த நேரத்தில் தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த வைஷ்ணவி விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், ‘“வெளிப்படைத் தன்மை எங்கே?” ஒரு அரசியல் தலைவர் என்றாலே அவர் மக்களுக்கானவர். அவரின் ஒவ்வொரு செயலும் மக்களின் பார்வைக்குள் வெளிப்படையாக இருக்க வேண்டும். இன்று கரூர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த தவெக தலைவர் விஜய் “கண்ணீர் மல்க அழுதார்”, “மன்னிப்பு கேட்டார்” என்று செய்தி ஒளிபரப்புகின்றனர். அவர் எங்கே அழுதார்? யாரிடம் மன்னிப்பு கேட்டார்? எந்த சூழ்நிலையில் நடந்தது? இவற்றில் எதுவும் வெளிப்படையாக மக்களுக்கு தெரிவதில்லை. கட்சித் தலைவர்கள் தங்களின் செயல்களில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். "உண்மையும் இல்லை ஊடக சந்திப்பும் இல்லை, தவெக விஜய் வேஸ்ட் என விமர்சித்துள்ளார்.





















