TTV Dhinakaran with ADMK: மீண்டும் அதிமுகவில் டிடிவி? மனம் மாறிய இபிஎஸ்! பாஜக பக்கா ஸ்கெட்ச்
டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை இபிஎஸ் திரும்ப பெற்றுள்ளார். அதிமுக தற்பொழுது பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ள நிலையில் டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்றுள்ளதன் மூலம் அவரை மீண்டும் கட்சியில் இணைக்க இபிஎஸ் தயாராகி வருவதாக சொல்கின்றனர்.
அதிமுகவில் துணைப்பொதுச்செயலாளாராக இருந்த டிடிடி தினகரன் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்த 2018 ஆம் ஆண்டு அம்மா மக்கள் என்ற முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். அதில், கருப்பு, வெள்ளை, சிகப்பு நிறத்துடன் நடிவில் ஜெயலலிதா இருப்பது போல் கொடியை அறிமுகபடுத்தினார். இச்சூழலில் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுகவின் கட்சி கொடியில் உள்ளது போல் கருப்பு, வெள்ளை, சிவப்பு கொடி பயன்படுத்த டிடிவி தினகரனுக்கு தடை விதிக்க வேண்டும் என்று இபிஎஸ் தரப்பில் சென்னை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யபட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு இன்று சென்னை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இபிஎஸ் தரப்பில்,இந்த வழக்கை திரும்ப பெறுவதாகவும், இதனை நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் எனவும் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்டு நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து உத்தரவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்தது. ஏற்கனவே இந்த கூட்டணியில் டிடிவி தினகரன் இருக்கும் சூழலில் பாஜக இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று இபிஎஸ்-யிடம் சொன்னதாக தகவல் வெளியானது. இதனால் தான் இபிஎஸ் இந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளார் என்றும் மீண்டும் அதிமுகவில் டிடிவி தினகரனை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாகவும் சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.





















