CM MK Stalin Speech : சொத்து வரி உயர்வு ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
CM MK Stalin Speech : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உள்ளாட்சி அமைப்புகளுக்கு நீண்ட நாட்களாக தேர்தல் நடத்தப்படவில்லை. இதன்காரணமாக அங்கு வளர்ச்சி பணிகள் தேக்க நிலையில் இருந்தன. மேலும் உள்ளாட்சி அமைப்புகள் வருவாய் பற்றாகுறையில் இருக்கும் போது அதை சமாளிக்க வரி உயர்வு மிகவும் அவசியமான ஒன்றாக அமைந்தது. தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வந்துள்ளனர். அவர்கள் வந்தவுடன் அவர்கள் தங்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நிதி ஆதாரத்தை அரசிடம் இருந்து எதிர்பார்ப்பார்கள். ஆகவே வேறு வழியின்றி இந்த சொத்து வரி உயர்வை செய்திருக்கிறோம். அதில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்காத வகையில் உயர்த்தப்பட்டுள்ளது அதற்காக தான் கட்டடங்களின் அளவிற்கு ஏற்ப சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் நகர்ப்புறத்திலுள்ள மொத்த குடியிருப்புகளில் 83% மக்களை இந்த வரி விதிப்பு பாதிக்காது. இந்த வரி உயர்வை பத்திரிகைகள் கூட வரவேற்றுள்ளன. மாநிலத்தின் வளர்ச்சிக்கு இந்த வரி உயர்வு முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. எனவே இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் தோழமை கட்சிகள் ஆகிய அனைவரும் இந்த வரி விதிப்பில் அரசியல் செய்யாமல் ஒட்டு மொத்த மாநில வளர்ச்சி உறுதுணையாக இருக்க வேண்டும் என வேண்டி கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.