Tanjore DMK Issue : நீயா நானா அடித்துக்காட்டு.. KN நேரு vs அன்பில்! புகைச்சலில் தஞ்சாவூர் திமுக!
திமுக எம்எல்ஏ - எம் பி ஆகியோர் மத்தியில் நடைபெறும் குஸ்தியால், தஞ்சாவூர் திமுக அல்லோகலப்பட்டு வருகிறது..
தஞ்சாவூர் திமுகவை சேர்ந்த துரை சந்திரசேகரன் நடிகர் சிவாஜி கணேசனையே தோற்கடித்தவர் என்ற பெருமை கொண்டவர். கே என் நேருவின் தீவிர ஆதரவாளரான திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், தஞ்சாவூர் திமுகவின் மத்திய மாவட்ட செயலாளராக இருக்கிறார்.
இந்நிலையில் இவருக்கும் அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று தஞ்சாவூர் எம் பி ஆன முரசொலிக்கும் இடையே கோல்ட் வார் உச்சகட்டத்தில் நடைபெற்று வருகிறது.
இதன் தொடக்கப் புள்ளியே, தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கான எம் பி சீட் வழங்கியது இருந்து தான் தொடங்கியது என்கிறார்கள் திமுகவினர். மகேஷ் கிருஷ்ணசாமிக்கு சீட் வாங்கி கொடுக்க நினைத்தார் துரை சந்திரசேகரன், அதற்கான காய்களையும் அமைச்சர் கே என் நேரு மூலமாக நகர்த்தி வந்தார்.
ஆனால் அமைச்சர் அன்பில் மகேஷ் மூலமாக காய்களை நகர்த்திய முரசொலி தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பெற்றார்.
இங்கே தான் ஐந்து முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட, தன்னால் தன்னுடைய சொந்த மாவட்டத்தில் தான் நினைத்த நபருக்கு சீட் கூட வாங்கிக் கொடுக்க முடியவில்லை என்ற ஆதங்கம் துரை சந்திரசேகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் வெடித்துள்ளது.
மேலும் தன்னால் ஒரு காலத்தில் வளர்த்துவிட்டபட்ட முரசொலி, தற்போது எம்பி ஆன பிறகு தன் கட்டுப்பாட்டை மீறுகிறார், மேலும் தற்போது ஒன்றிய செயலாளர் ஆக இருக்கும் அவர் மாவட்ட செயலாளர் பதவியை குறிவைத்து காய்களை நகர்த்தி வருகிறார், இது நாளை தனக்கே ஆபத்தாக முடியும் என்று அப்சட்டில் இருக்கிறார் துரை சந்திரசேகரன்.
இந்த புள்ளியில் தான் இருவருக்கும் இடையேயான முதல்கள் தஞ்சாவூர் திமுகவை அதகலப்படுத்தி வருகிறது. இதனால் தஞ்சாவூர் திமுகவில் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து தற்போது தனித்தனியாக உள்ளடி வேலைகளை பார்த்து வருவதாக தகவல்கள் வருகின்றன.
எப்படியும் விரைவில் அமைச்சரவை மாற்றும் இருக்கும் என்று தகவல்கள் வெளிவரும் நிலையில், எப்படியாவது அமைச்சர் அவையில் இடம் பிடித்து விட வேண்டும் என்று தீவிரமாக முயன்று வருகிறார் துரை சந்திரசேகர். ஆனால் அதை தடுக்கும் வகையில் அவரை பற்றிய தவறான தகவல்களை முரசொலி மேலிடத்திற்கு தெரிவித்து வருவதாக குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள் துரை சந்திரசேகரன் ஆதரவாளர்கள்.
அதே நேரம் ஒரத்தநாட்டில் வைத்தியலிங்கம் ஜெயிப்பதற்கு காரணமே, துரை சந்திரசேகரன் தான். திமுக வேட்பாளர் புல்லட் ராமச்சந்திரனுக்கு எதிராக பல்வேறு உள்ளடி வேலைகளை பார்த்தார். தன்னை மீறி யாரும் அந்த பகுதிக்கு வளர்ந்து விட கூடாது என்று நினைப்பவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதா என்று முரசொலியன் ஆதரவாளர்கள் இன்னொரு பக்கம் கொதித்து வருகின்றனர்.
இதில் ஒருவர் கே என் நேருவின் ஆதரவாளர், இன்னொருவர் அன்பில் மகேசின் ஆதரவாளர் என்பதால், தொகுதியை தங்கள் கண்ட்ரோலில் வைத்திருக்க இவர்களும் தங்களுடைய ஆதரவாளர்கள் மூலமாக அரசியல் செய்வதால், தஞ்சாவூரு திமுக பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் தகிதகித்து வருகிறது.
![செங்கோட்டையனுக்கு வந்த PHONE CALL.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடிக்கு ஆப்பு ரெடி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/db88611116f5fb53e7e387b9ff33dfd61739191169087200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
![ஆதங்கத்தில் கோகுல இந்திரா! கடுப்பான ஜெயக்குமார்! என்ன செய்யப்போகிறார் EPS?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/5b4e1f532ca787adb10cbb00392fdd111739190625263200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![Rajini fans vs TVK: விஜய் சுற்றுப்பயணம்” அழுகிய முட்டை வீசுவோம்” ரஜினி ரசிகர்கள் சதி திட்டம்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/89e8df423a774911519408d6856064301739165344774200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/09/345e022ce9805bc1c7595017546428c21739116727234200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![”பாஜக ரொம்ப கொடூரம்” கடும் கோபத்தில் ஸ்டாலின்! அண்ணாமலை ரியாக்ஷன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/09/b5f4e4de7ab36061d95683df7cf39ee61739115813372200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)