Rahul Gandhi on Modi : காந்தி யாருன்னு தெரியுமா? CERTIFICATE தேவையில்ல மோடி! ராகுல் காந்தி விளாசல்
1982ல் வெளியான காந்தி என்ற படம் மூலியமாக தான் மகாத்மா காந்தி உலக அளவில் பிரபலமானார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் “ஒரு பொலிட்டிக்கள் சைன்ஸ் மாணவருக்கு காந்தி படத்தை பார்த்தால் தான் அவரை பற்றி தெரிந்து கொள்ள முடியும் என்று மோடியின் கல்வி தகுதியை தாக்கி பதிலடி கொடுத்துள்ளார்.
அண்மையில் ஏபிபி செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்திருந்தார் பிரதமர் மோடி, அதில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்திருந்த அவர் காந்தி என்ற படம் வருவதற்கு முன் மகாத்மா காந்தியை யாருக்குமே தெரியாது என்று தெரிவித்த ஒரு விஷயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக “கடைசி 75 ஆண்டுகளில், மகாத்மா காந்தியை உலகம் அறிய செய்திருக்க வேண்டியது நம்முடைய கடமையள்ளவா? என்னை மன்னித்துவிடுங்கள், காந்தியை யாருக்குமே தெரியவில்லை. காந்தி என்ற படம் வெளியான பிறகு தான், அவர் குறித்து அறிந்துகொள்ள உலகம் ஆர்வம் காட்டியது. மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை இந்த உலகம் அறிந்து வைத்திருக்கிறது என்றால் காந்தி அதற்கு எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை” என்று 1982ல் காந்தி என்று ரிச்சர்ட் அட்டேன்பொரோ இயக்கத்தில் வெளியான படத்தை குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நம்முடைய இந்திய நாடு முழுவதும் மகாத்மாவாக கொண்டாடப்படும், காந்தியின் தியாகங்களை ஒரு படம் மூலமே தெரியவந்ததாக மோடி சொன்ன கருத்து மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். தன்னுடையை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் ”ஒரு பொலிட்டிக்கல் சைன்ஸ் மாணவருக்கு மட்டுமே மகாத்மா காந்தியை பற்றி அறிந்துகொள்ள திரைப்படம் தேவைப்படும்” என குறிப்பிட்டு மோடி ஒரு அரசறிவியல் மாணவர், ஆனால் அவர் படம் பார்த்து காந்தியை தெரிந்துக்கொண்டார்கள் என்று சொல்வதை தாக்கியுள்ளார்.
மேலும் மகாத்மா காந்தி ஒரு சூரியன், உலகில் உள்ள இருளை எதிர்த்து போராட மக்களுக்கு நம்பிகை ஒளியை கொடுத்தவர். அநீதிக்கு எதிராக ஒரு சாமாண்ய மனிதனும் போராடலாம் என்ற பாதையை நேர்மையான அகிம்சை வழியில் போராட கத்துக்கொடுத்தவர்.”காந்திக்கு எந்த கல்லூரி சர்டிப்பிக்கேட்டும் தேவையில்லை. என மோடியை விமர்சித்துள்ளார்.
இதே போன்று மேலும் பல காங்கிரஸ் தலைவர்கள் மோடியை தாக்கி வருகின்றனர். குறிப்பாக “நல்ல வேலை மோடிஜி பிரதமர் ஆவதற்கு முன்பே பல நாடுகளில் காந்தியின் உருவ சிலையை நிறுவி விட்டார்கள். இல்லையெனில், காந்தி கதாபாத்திரத்தில் நடித்த பென் கிங்ஸ்லி உருவசிலையை காந்தி என சொல்லி பல இடங்களில் நிறுவி இருப்பார் மோடி” என்று பவன் கேரா தாக்கியுள்ளார்.