Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’
மூனு வருஷமா போராடுறேன் குடிநீர் பிரச்சனை தீரல என கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அமைச்சர் பொன்முடியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட வி.புத்தூர் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக எதிரான பாலியல் சீண்டல்கள் குறித்த உறுதிமொழியும், அதே போன்று HIV/ AIDS நோய் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஊராட்சியின் கணக்கு வழக்குகள் குறித்தும், 18 வகையான முக்கிய தேவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்களிடம் பொதுவான குறைகள் இருந்தால் கூறும்படி அமைச்சர் பொன்முடி கேட்டுக்கொண்டார். அப்போது, வி. புத்தூர் ஊராட்சி மன்ற தலைவி பூர்ணிமா அவர்களின் கணவர் திமுகவை சேர்ந்த சிவராஜ் என்பவர் கடந்த 3½ ஆண்டுகளாக குடிநீர் வேண்டி போராடி வருவதாக தெரிவித்தார் இதனைக் கேட்ட அமைச்சர் மூன்றரை ஆண்டு காலமாக போராடினாயா? ஏன் என்னிடம் வந்து கூறவில்லை. இதுவரை என்னை பார்த்து குடிநீர் பிரச்சினை இருப்பதாக தெரிவித்தாயா ?தெரிவித்திருந்தால் உடனடியாக சரி செய்து இருப்பேன் என்று கூறி அவரை ஆஃப் செய்தார் பொன்முடி.
எனினும் திரும்ப திரும்ப அவர் மைக்கை வாங்கி குடிநீர் பிரச்சனை குறித்து பேசியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.