Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்
இது Punch டயலாக் இல்ல, நெஞ்சு டயலாக் என விஜய்யை ரவுண்டுகட்டிய சீமானுக்கு கூலாக பிறந்தநாள் வாழ்த்து சொல்லியுள்ளார் தவெக தலைவர் விஜய். கூட்டணிக்கான அழைப்பா என நாம் தமிழர் கட்சியினர் காலர் தூக்கி வந்தாலும், இதற்கு பின்னணியில் சீமானுக்கு எதிரான விஜய்யின் ஸ்கெட்ச் இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் அரசியல் எண்ட்ரி கொடுத்ததில் இருந்தே கூட்டணிக்கான தூது அனுப்பி வந்தார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஆனால் விஜய் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. நாட்கள் போக போக நாம் தமிழர் நிர்வாகிகள் விஜய் பக்கம் சாய்ந்து வருவதாக தகவல் வெளியானது. மாநாட்டிற்கு முன்பு வரை ஆயிரம் இருந்தாலும் விஜய் என் தம்பி, என்னை எதிர்த்தே வேலை செய்தாலும் அவரை ஆதரிப்பேன் என சொல்லிவந்த சீமான், பிறகு அந்தர்பல்டி அடித்து என்னைப் பெற்ற தாய் தந்தையராகவே இருந்தாலும், எங்களுடைய கொள்கைக்கு எதிராக இருந்தால், எதிரி எதிரிதான் என்று ஆவேசமாக பேசினார். மேலும் விஜய்யை நக்கல் செய்தது தவெகவினருக்கு கடும் எரிச்சலை கிளப்பியது.
இதற்கும் விஜய் வழக்கும் போல் எந்த பதிலும் சொல்லவில்லை. சீமானை விஜய் கண்டுகொள்ளவில்லையா என விமர்சிக்கப்பட்டது. இந்தநிலையில் சீமானின் பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்து சொல்லி ட்விஸ்ட் கொடுத்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், ‘நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
கூட்டணிக்காக விஜய் வாழ்த்து சொல்லியுள்ளதாக நாம் தமிழர் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். ஆனால் தவெக கட்சியினரையும், ரசிகர்களையும் சீமானுக்கு எதிராக விஜய் திருப்பியுள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. நீங்க எவ்ளோ மோசமா பேசுனாலும், பதிலுக்கு தரம் தாழ்ந்து விமர்சிக்காதவன் தான் உண்மையான தலைவன் என்று தவெகவினர் கொண்டாடி வருகின்றனர். இப்படிப்பட்ட ஒருவரை சீமான் கடுமையாக பேசிவிட்டாரே என கூடுதலாக சீமானை ரவுண்டு கட்ட ஆரம்பித்துள்ளனர்.
விஜய் இந்த வாழ்த்தின் மூலம் 2 வழிகளில் பலனடைந்ததாக தெரிகிறது. அவரே நேரடியாக பதிலடி கொடுத்திருப்பதை விட மறைமுக அட்டாக் மோடை கையில் எடுத்து இளைஞர்களை சீமானுக்கு எதிராக திருப்பியுள்ளார். மற்றொன்று, ”மற்றவர்களின் விமர்சனங்களில் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை மட்டும் எடுத்து கொள்வோம், மற்றவற்றை மறந்தும் கூட மனதில் ஏற்றாமல் கடந்து செல்ல பழகுவோம்” என்று நான் சொன்னதையே செய்வேன் என காட்டிக் கொள்வதற்கான ரியாக்ஷன் இது என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.