Manickam Tagore On Selvaperunthagai | டெபாசிட் இழந்த மாணிக்கம் தாகூர் வேட்டியை மடிக்கும் செ.பெருந்தகை
காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமா தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமா என்பதில் செல்வப்பெருந்தகை மற்றும் மாணிக்கம் தாகூர் இடையே காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் வாக்குவாதம் நடந்ததாக சொல்கின்றனர். இறுதியில் மெஜாரிட்டியை வைத்து செல்வப்பெருந்தகை ஒரு சம்பவம் செய்துள்ளார். அதேபோல் மாணிக்கர் தாகூர் விஜய் பக்கம் சாய்வதற்கு முக்கிய காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ட் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணி விவகாரம் தான் முக்கியமான விவாதமாக மாறியது. விஜய் அரசியல் ENTRY கொடுத்ததில் இருந்தே காங்கிரஸ், தவெக கூட்டணி பற்றிய பேச்சு அடிபடுகிறது. இந்தநிலையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் திமுகவுடன் கூட்டணி வைப்பதா தவெகவுடன் கூட்டணி வைப்பதா என்ற விவாதம் வந்துள்ளது.
அப்போது காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என சொல்லியுள்ளார். ஏற்கனவே நடந்த தேர்தல்களில் திமுகவுடன் கூட்டணி வைத்து தான் காங்கிரஸ் சார்பாக நிறைய MLA, MP-க்கள் உருவானார்கள். அதனால் வரும் தேர்தலிலும் அதே வியூகத்தை கையில் எடுப்பது தான் சரியாக இருக்கும் என செல்வப்பெருந்தகை யோசனை சொல்லியுள்ளார்.
அதற்கு எம்.பி மாணிக்கம் தாகூர் உடனே மறுப்பு தெரிவித்துள்ளார். தவெகவுடன் கூட்டணி வைத்தால் தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கான வளர்ச்சி இருக்கும், நமக்கெனப் தனி அடையாளமும் கிடைக்கும் என சொல்லியுள்ளார். காங்கிரஸ் கட்சியினரும் அதையே விரும்புவதாக பாயிண்டை முன்வைத்துள்ளார். உடனடியாக செல்வப்பெருந்தகை இங்கே இருப்பவர்களிடம் கேட்போம், மெஜாரிட்டி என்ன வருகிறதோ அதை பொறுத்து முடிவெடுப்போம், தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்பினால் அதனை டெல்லி தலைமை காதுகளுக்கு கொண்டு செல்கிறேன் என சொல்லியுள்ளார். யார் யாரெல்லாம் தவெகவுடன் கூட்டணி வைக்க விரும்புகிறீர்கள் என செல்வப்பெருந்தகை கேட்டதும், ஒருவர் கூட கை தூக்காமல் சைலண்டாக இருந்துள்ளனர். இதன்மூலம் திமுக கூட்டணியில் இருப்பதையே காங்கிரஸ் கட்சியினர் விரும்புவதாக செல்வப்பெருந்தகை சொல்லியுள்ளார்.
மாணிக்கம் தாகூர் தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொல்வதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தான் காரணம் என சொல்கின்றனர். கே.சி.வேணுகோபால் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். தமிழ்நாட்டை அடுத்து கேரளாவில் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் விஜய்யுடன் கூட்டணி வைத்தால் அது தமிழக அரசியலுக்கு மட்டுமில்லாமல் கேரள அரசியலுக்கும் சேர்த்து பலன் கொடுக்கும் என நினைத்ததாக சொல்கின்றனர். அடுத்த ஆண்டு கேரளாவிலும் சட்டசபை தேர்தல் வரவிருக்கும் நிலையில் அதனையும் கணக்கு பண்ணி கே.சி.வேணுகோபால் தான் மாணிக்கம் தாகூரை வைத்து தமிழக காங்கிரஸை தவெகவுடன் கூட்டணி வைப்பதற்கான குரலை எழுப்புவதாக பேச்சு அடிபடுகிறது.
கரூர் துயர சம்பவம் நடந்தவுடன் கே.சி.வேணுகோபால், கரூர் சென்று நெரிசல் ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்தார். அதேபோல் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதன் பின்னணியிலும் கூட்டணி கணக்குகளே இருப்பதாக சொல்கின்றனர். இருந்தாலும் செல்வப்பெருந்தகை மற்றும் தமிழக காங்கிரஸ் முக்கிய புள்ளிகளின் சாய்ஸ் திமுகவாக இருப்பதால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.





















