திமுகவில் காளியம்மாள்? விஜய் மீது திடீர் விமர்சனம்! தட்டித்தூக்கிய ராஜிவ் காந்தி
நாதகவில் இருந்து விளகிய காளியம்மாள்-க்கு திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பல ஆஃபர்களை கொடுத்து தங்கள் பக்கம் இழுத்து கொள்ள ரெடியாக உள்ளனர். அந்த அளவுக்கு காளியம்மாள்-க்கு டிமாண்ட் எகிறி வருகிறது. இந்தநிலையில் காளியம்மாள் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாக விளங்கியவர் காளியம்மாள் சில மாதங்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியை விட்டு விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டார். முன்னதாகவே காளியம்மாள் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தன. இந்நிலையில் சரியாக தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவுக்கு ஓரிரு நாட்களுக்கு முன் அவர் நாதகவில் இருந்து விலகியது இந்த கணிப்பை மேலும் வலுப்படுத்தியது. ஆனால் அந்த விழாவில் அவர் தவெக வில் இணையவில்லை. இந்நிலையில் தான் தவெக சார்பில் காளியம்மாளிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் மேலும் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்போவதாகவும் ஆஃபர்ஸ் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியது. இந்தநிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் உள்ளாட்சி பிரதிநிதிகளைப் பெறாமல், உட்கட்டமைப்பை வலிமைப்படுத்தாமல், மக்களைச் சந்திக்காமல் எந்தவொரு கட்சிக்கும் வெற்றி சாத்தியமில்லை என தவெகவை விமர்சனம் செய்துள்ளார்.
இந்தநிலையில் நடுவில் புகுந்த திமுககாரர் அதனை தவிடுபிடியாக்கி காளியம்மாளை தூண்டில் போட்டு தூக்கிவிட்டதாக ரகசிய தகவல் வெளியாகியது. கட்சியில் தனக்கான அங்கீகாரம் சரியாக கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருந்த காளியம்மாளுக்கு ஆளும் கட்சியான திமுகவில் இருந்து எம்பி சீட் வழங்கப்படுவதாக ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுகவில் தனக்கென அங்கீகாரம் கிடைத்தால் அது தனது நீண்டகால அரசியல் வாழ்வுக்கு ப்ளஸ் என கணக்கு போட்ட காளியம்மாள் தவெகவின் டீலை ஓரம்கட்டிவிட்டு திமுகவுக்கு ஓகே சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காளியம்மாளிடம் திமுக சார்பில் பேச்சுவார்த்தை நடத்தியது ராஜீவ் காந்தி தான் எனவும் கூறப்படுகிறது. எனவே விரைவில் காளியம்மாள் திமுகவில் இணையலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், சைக்கிள் கேப்பில் புகுந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், காளியம்மாளுக்கு கட்சியில் பெரிய பொறுப்பு வழங்க காத்திருப்பதாகவும் கூறி, அவரை அதிமுக பக்கம் இழுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தவெகவில் இருந்து விலகிய வைஷ்ணவி விலகி திமுகவில் இணைந்தார். இதனால் காளியம்மாள்ளும் தவெகவில் இணைய வாய்பிருப்பதாக கூறப்படுகிறது.
காளியம்மாள் இனி சேர்வதற்கு கட்சியே இல்லை என்ற அளவில், கிட்டத்தட்ட முக்கிய கட்சிகளில் எல்லாம் அவரை சேர்த்துவிட்டு செய்திகள் வெளியாகிவிட்டன. ஆனால், அவரோ இன்னும் மௌனம் கலைக்காமல் இருக்கிறார். உண்மையில் அவர் யாருடன் பேசி இருக்கிறார், என்ன முடிவெடுத்து இருக்கிறார் என அவரே வாய் திறந்தால்தான் உண்டு. ஆனால், அவர் அதை செய்யாத வரையிலும், இருக்கும் எல்லா கட்சிகளிலும் அவரை சேர்த்துவிட்டுவிடுவார்கள்.





















