மேலும் அறிய

CM Vijay Cabinet | அமைச்சர் பதவி யாருக்கு? காய் நகர்த்தும் விசிக, காங்! TVK மா.செ.க்கள் போர்கொடி! குழப்பத்தில் CM விஜய்

காங்கிரஸ், விசிக, IUML என ஆதரவு கொடுத்த கட்சிகள் ஒருபுறம் என்றால் தவெகவிலும் அமைச்சர் பதவிக்கு போட்டா போட்டி நடந்து கொண்டிருப்பதால் அமைச்சரவை பட்டியலை தயார் செய்ய முடியாமல் முதலமைச்சர் விஜய் குழம்பி இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. இன்னும் 24 மணி நேரத்தில் மொத்த பஞ்சாயத்தையும் முடித்து பட்டியலை ரெடி செய்யும் டாஸ்க் விஜய் கையில் இருப்பதாக சொல்கின்றனர்.

விஜய் முதலமைச்சராக பதவியேற்ற போது அவருடன் 9 MLA-க்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கான இலாகா ஒதுக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த 16ம் தேதி அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்தநிலையில் மற்ற துறைகளுக்கு இன்னும் அமைச்சர்கள் ஒதுக்கப்படாமல் இருப்பதால் நிர்வாக ரீதியாகவும் சிக்கலாக மாறியுள்ளது. குறிப்பாக போக்குவரத்துத்துறை, வேளாண் துறை, உயர்கல்வித்துறை, இந்துசமய அறநிலையத்துறை, வனத்துறை, பால்வளத்துறை உள்ளிட்ட முக்கியமான துறைகளுக்கும் இன்னும் அமைச்சர்கள் ஒதுக்கப்படாமல் இருக்கிறார்கள்.

அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடியாமல் முதலமைச்சர் விஜய் குழம்பி போய் இருப்பதாக பேச்சு இருக்கிறது. அமைச்சரவையில் 2 சீட் கேட்டு கூட்டணிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, முக்கியமான சில துறைகளை தவெகவிடம் கேட்கிறது. ஆனால் சில துறைகளை கூட்டணிக்கு விட்டுக் கொடுப்பதற்கு தவெக ரெடியாக இல்லை என சொல்கின்றனர். அதேபோல் ஆட்சியில் பங்கு வேண்டுமா இல்லையா என்பதில் விசிக தரப்பில் இருந்து இன்னும் தெளிவான பதில் வரவில்லை. கட்சியினர் அமைச்சரவை வேண்டும் என ஆசைப்படுவதாகவும், திருமாவளவன் அதெல்லாம் வேண்டாம் என நினைப்பதாகவும் விசிக வட்டாரத்தில் தகவல் கிடைத்துள்ளது. அமைச்சரவையில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அண்ணா திருமாவளவனை அழைக்கிறோம்.. மதசார்பற்ற சக்திகள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமென்பதே விருப்பம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியிருப்பதன் பின்னணியில் இந்த பேச்சுவார்த்தையே இருப்பதாக தெரிகிறது. அதேபோல் IUML-ம் அமைச்சரை கேட்டு தவெகவிடம் ஆலோசனை நடத்தி வருவதாக சொல்கின்றனர். இவர்களுக்கெல்லாம் அமைச்சரவையை ஒதுக்குவதை தாண்டி எந்த துறையை கொடுக்கலாம் என்பதில் தான் இழுபறி நீடித்து வருகிறது.

இதெல்லாம் ஒருபக்கம் என்றால் தவெகவினரே அமைச்சரவை பதவிக்கு அடித்துக் கொள்வதாக பேச்சு இருக்கிறது. களத்துக்கே சென்று ஆய்வு செய்வது, அதிகாரிகளை LEFT&RIGHT வாங்குவது, இந்த சம்பவங்களை எல்லாம் அவர்களே வீடியோ எடுத்து வெளியிடுவது என எப்படியாவது தலைமையிடம் நல்ல பெயர் வாங்கி அமைச்சர் ஆகி விட வேண்டும் என போராடி வருகின்றனர். அதனால் அவர்களுக்கு அதிருப்தி வராமலும் அமைச்சரவையை ஒதுக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதில் அரசு ரீதியாகவும் அவசரம் இருக்கும் நிலையில், நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை மற்ற அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என ஆளுநர் அர்லேக்கருக்கும் தகவல் சென்றுள்ளதாக தெரிகிறது. அதனால் 24 மணி நேரத்திற்குள் அமைச்சரவை பட்டியலை தயார் செய்யும் டாஸ்க் முதலமைச்சர் விஜய் கைகளுக்கு சென்றுள்ளது. கூட்டணி பஞ்சாயத்தையும் முடிவுக்கு கொண்டு வந்து, தவெகவினரையும் குஷிப்படுத்தும் வகையிலான அமைச்சரவை பட்டியல் ரெடியாகுமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
"மக்களுக்கு பிரச்சனைன்னா ஓடோடி வரணும் " ஆட்சியருக்கு JCD பிரபாகர் அதிரடி உத்தரவு
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget