மேலும் அறிய

" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி

சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த மறுநாளே மனைவியை ரவுடி கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜாமீனில் எடுக்க மனைவி முயற்சி இல்லை

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகேயுள்ள சொட்டதட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் யோகராஜன் (எ) கருவாயன் ( வயது 29 ) இவரது மனைவி 25 வயதுடைய பாண்டிச் செல்வி. இவர்களுக்கு யோகமித்ரன் ( வயது 6 ) , தீனா ( வயது 3 ) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

யோகராஜன் மீது திருட்டு மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டதையடுத்து , கடந்த ஆண்டு அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்த காலத்தில் , தன்னை ஜாமீனில் எடுக்க மனைவி பாண்டிச் செல்வி எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும் , தனது பெற்றோர்களே அதற்காக ஓடினார்கள் என்றும் யோகராஜன் மனக் கசப்பில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒரு ஆண்டு சிறை வாசத்தை முடித்து சிறையிலிருந்து வெளியே வந்த யோகராஜன் , சொட்டதட்டியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மனைவியுடன் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

" நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா "

வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த யோகராஜன் "நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா " என கேட்டு வீட்டில் இருந்த அரிவாளால் மனைவி பாண்டிச் செல்வியை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாயை தந்தை அரிவாளால் வெட்டியதை கண்டு குழந்தைகள் அலறி அழுதுள்ளனர்.

அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், யோகராஜன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கீழடி காவல் துறையினர் , பாண்டிச் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மானாமதுரை துணைக் காவல் கண்காணிப்பாளர் லோகநாதன் மற்றும் கீழடி காவல் ஆய்வாளர் மயில் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர். மனைவியைக் கொலை செய்து விட்டு

தப்பியோடிய யோகராஜனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. சிறையில் இருந்து வெளியே வந்த மறுநாளே நடந்த இந்த கொடூரக் கொலை , கீழடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
சென்னை மக்களுக்கு பறந்த ஹாப்பி நியூஸ்! அண்ணா பல்கலைக்கழக சிக்னலில் மாறப்போகும் மாபெரும் காட்சி!
சென்னை மக்களுக்கு பறந்த ஹாப்பி நியூஸ்! அண்ணா பல்கலைக்கழக சிக்னலில் மாறப்போகும் மாபெரும் காட்சி!
SBI Revises Cash Withdrawal Rules: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஜிஎஸ்டியுடன் கட்டணம்!
SBI Revises Cash Withdrawal Rules: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஜிஎஸ்டியுடன் கட்டணம்!
தமிழகத்தில் இன்று பரபரப்பு முதல் டெல்லி அரசியல் வரை.. ஆகஸ்ட் 21-ம் தேதி TOP 10 முக்கிய செய்திகள்!
தமிழகத்தில் இன்று பரபரப்பு முதல் டெல்லி அரசியல் வரை! ஆகஸ்ட் 21-ம் தேதி TOP 10 முக்கிய செய்திகள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Trump Vs Iran: உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
7 Seater: அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
Embed widget