Chandrababu Naidu vs Modi : OFF ஆன நிதிஷ் குமார்..முரண்டு பிடிக்கும் சந்திரபாபு! கலக்கத்தில் மோடி!
மக்களவையில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் ஆட்டத்தில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்ட நிலையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி முரண்டு பிடித்து வருகிறது. இதனால் டெல்லி பாஜக தலைமை பரபரத்து கொண்டிருக்கிறது.
இதுவரை மக்களவையில் தலைவரை தேர்ந்தெடுப்பதில் தேர்தல் நடந்ததே இல்லை என்பது தான் நாடாளுமன்றத்தின் வரலாறு. ஒருமித்த கருத்துடன் ஆளும் கட்சி, எதிர்கட்சி ஆகியவை செயல்பட்டுள்ளன. அதே நேரம் கடந்த 2014, 2019ல் பெரும்பான்மை இருந்ததால், பாஜகவிற்கு யாரிடமும் கேட்டு முடிவெடுக்க வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை.
ஆனால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், 240 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்ற நிலையில் தனி பெரும்பான்மை கிடைக்காததால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்தின் 16 எம்பிக்கள் ஆதரவுடனும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் 12 எம்பிக்கள் ஆதரவுடனும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது.
இந்நிலையில் அண்மையில் மோடி கேபினேட் 3.0 விலும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் தலா இரண்டு அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட்டன.
இந்த சூழலில் தான் அடுத்த கட்டமாக மக்களவையின் சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் ரேஸ் NDA கூட்டணிக்குள் வேகம் எடுத்துள்ளது, அங்கே தான் செக் வைக்கிறார் சந்திரபாபு நாயுடு.
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை பொறுத்த அளவில் பாஜக தயவுடன் தான் பீகாரில் ஆட்சியை நடத்தி வருகிறது. மேலும் பாஜக கொடுத்த சில ஆபர்களை வாங்கிகொண்ட நிதிஷ் “பாஜக சார்பில் பரிந்துரை செய்பவரை மக்களவை தலைவராக தேர்ந்தெடுக்க நாங்கள் முழு ஆதரவு கொடுப்போம்” என சொல்லி ரேஸில் இருந்து ஒதுங்கிகொண்டார்.
பாஜகவை பொறுத்தவரை மீண்டும் ஓம் பிர்லாவை மக்களவை தலைவராக தேர்ந்தெடுக்க விரும்புகிறது. ஆனால் மக்களவை சபாநாயகர் பதவியை ஆரம்பம் முதலே சந்திரபாபு நாயுடு டார்கெட் செய்து வருகிறார். குறிப்பாக “மக்களவை தலைவர் பதவி தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி ஆலோசித்து பாஜக முடிவெடுக்க வேண்டும், அதன் பிறகே எங்கள் ஆதரவை கொடுப்போம்” என்று தெலுங்கு தேசம் ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்து வருகிறது.
அண்மையில் டெல்லியில் ராஜ்நாத் சிங் தலைமையில் புதிய மக்களவை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான NDA கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது, அதிலும் தெலுங்கு தேசம் கட்சியினர் யாருமே பங்கேற்கவில்லை.
இந்நிலையில் 18வது மக்களவை வருகிற ஜூன் 24ம் தேதி தொடங்குகிறது, மூத்த எம்பிக்கள் யாரேனும் தற்காலிக தலைவராக அமர்ந்து புதிய எம்பிக்களுக்கு பதவி பிரமானம் செய்து வைப்பார்கள்.
அதன் பின் ஜுன் 26ம் தேதி புதிய மக்களவை தலைவருக்கான தேர்தல் நடைப்பெற இருக்கிறது. அதற்குள் தெலுங்கு தேசம் கட்சியை சரிகட்டி ஆக வேண்டும். இல்லையென்றால் தேர்தல் நடத்தி அது INDIA கூட்டணிக்கு சாதகமாக செல்ல வாய்ப்பு உருவாகிவிடும்.
அப்படி இருக்கையில் ஒரே ஒரு கேபினேட் மினிஸ்டர், இன்னொன்ரு இணை அமைச்சர் பதவி தான் கொடுத்தீர்கள். நாங்கள் கேட்ட ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்தும் கொடுக்க யோசிக்கீறிர்கள். சரி சிறப்பு நிதியாக 2.5 லட்சம் கோடி கேட்டோம், அதிலும் 25 ஆயிரம் கோடி வரை தான் தலையாட்டியுள்ளீர்கள்.
அதனால் மக்களவை சபாநாயகர் பதவியாவது எங்களுக்கு கொடுங்கள் என்று காராராக இருக்கிறார் சந்திர்பாபு நாயுடு.
இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த பாஜக எம்பி புரந்தேஸ்வரியை மக்களவை தலைவராக ஆக்கலாமா என்றும் யோசித்து வருகிறது பாஜக. இவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஸ்வரியின் சகோதரி என்பது குறிபிடத்தக்கது.
ஆனால் அதையும் சந்திரபாபு நாயுடு ஏற்றுகொள்ள வாய்ப்பு குறைவு தான் என்று சொல்லபடுகிறது, இந்நிலையில் சில சீக்ரெட் ஆப்ரேஷனில் இறங்கியுள்ள அமித்ஷா சந்திரபாபு நாயுடுவை ஒத்துக்கொள்ள வைக்க சீல டீலிங்கை பேசி வருவதாக தெரிகிறது.
ஆட்சி தொடங்கி இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அதற்குள்ளேயே ஒருமித்த கருத்துடன் கூட்டணி கட்சிக்குள் முடிவெடுப்பதில் பாஜக திணறி வருவது அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.