Chandrababu Naidu : நாயுடு தந்த MENU விழிபிதுங்கும் மோடி
இந்திய கூட்டணி தரப்பில் இருந்தும் அழைப்பு விடுக்கப்படுவதால் முக்கிய இலாகாக்கள் வேண்டும் என சந்திரபாபு பிடிவாதம் பிடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதானால் பாஜகவுக்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மோடி அமைச்சரவையில் பங்கேற்பதை உறுதி செய்துள்ள சந்திரபாபு நாயுடு, தமது கட்சிக்கு முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அதுவும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், விவசாயத்துறை அமைச்சகம், ஜல் சக்தி எனும் தண்ணீர் துறை அமைச்சகம் ஆகியவை தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் 3 கேபினட் அமைச்சர்கள் உட்பட 6 அமைச்சர்கள் பதவி தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் தெலுங்கு தேசம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம்.
தற்போதைய நிலையில், தெலுங்கு தேசம் கட்சியை விட்டால், வேறு வழியில்லை என்ற நிலையில், அதற்குச் செவிசாய்க்க வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், எந்தெந்த துறைகள் வழங்கப்படும் என்பது குறித்து பேச்சு நடத்தி முடிவெடுப்போம் என்றும் அதேபோல், அமைச்சர்கள் எண்ணிக்கை குறித்தும் சமரசமாகப் பேசி முடிவெடுப்போம் எனவும் பாஜக தலையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஆந்திரா அரசிற்கும் அதிக நிதி தேவைப்படுவதால், சந்திரபாபு நாயுடுவும், சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து, தமக்குத் தேவையான அமைச்சர் பதவிகளையும், சமரசம் செய்துப் பெறுவார் என தெலுங்குதேச கட்சியினரும் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.
இதுமட்டுமன்றி, நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கும் அமைச்சர் பதவிகள் வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு பாஜக தலைமை தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதெல்லாம் குறித்து பேசி, பல முக்கிய முடிவுகள் இன்றைய தேசிய ஜனநாயக் கூட்டணியின் கூட்டத்தில் எடுக்கப்படுகின்றன.
மேலும் தங்கள் ஆதரவின்றி பாஜக ஆட்சியமைக்க முடியாது என்பதால் அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கள், சபாநாயகர் பதவிகளை நிதிஷ் குமாரும், சந்திர பாபு நாயுடும் கேட்கின்றனர் இதானால் பாஜகவுக்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.