BS Yediyurappa Case : அத்துமீறிய எடியூரப்பா? புகார் கொடுத்த பெண் மரணம் பின்னணி என்ன?
அத்துமீறிய எடியூரப்பா? புகார் கொடுத்த பெண் மரணம் பின்னணி என்ன?
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா மீது போக்சோ புகார் செய்த பெண் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, பெங்களூரு சதாசிவநகர் காவல் நிலையத்தில், பெண் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் புகார் அளித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது, ஒரு பெண் பாலியல் புகார் அளித்த நிலையில், போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த பெண் தெரிவித்துள்ள புகாரில், கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி எடியூரப்பா வீட்டிற்கு சென்றபோது, தனது மகளை எடியூரப்பா பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் குற்றம் சாட்டி புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் எடியூரப்பா புகாரளித்த பெண் பெங்களூரு மருத்துவமனையில் காலமானார். பல உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட புகார்தாரர், கடுமையான சுவாச சிக்கல்கள் காரணமாக மே 26 ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பெண் இறப்பு குறித்து மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் மோகன் எம்ஆர் கூறுகையில், அந்த பெண்ணை அவரது மகள் அழைத்து வந்தார். தாயின் சிகிச்சை குறித்து மருத்துவக் குழுவுக்குத் தெரிவித்ததாவது, கடந்த எட்டு ஆண்டுகளாக சிறுநீரகக் கோளாறு மற்றும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, அவருக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளித்த போதிலும், கடுமையான சுவாசக் கோளாறால் அந்தப் பெண் உயிரிழந்தார் என்று மருத்துவர் தெரிவித்தார்.
மருத்துவர்கள், குடும்பத்தாரிடம் பிரச்னைகளை விளக்கியதாகவும், சிகிச்சை நடவடிக்கைகளில் அதிருப்தி இருந்தால் வழக்குப் பதிவு செய்யச் சொன்னதாகவும் தெரிவித்தார். ஆனால், சிகிச்சையில் குடும்பத்தினர் திருப்தி தெரிவித்ததாகவும், புகார் அளிக்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், அந்த பெண் இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது