VK Sasikala in ADMK? : சசிகலாவின் தலைமையை அண்ணன் ஏற்பார்! ஓ.பி.எஸ். தம்பி EXCLUSIVE பேட்டி
VK Sasikala in ADMK? : சசிகலா-டிடிவி தினகரனை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் என்று கூறி, தேனி மாவட்ட அதிமுகவினர் நேற்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-யை சந்தித்து முறையிட்டதிலிருந்து, பற்றி எரிகிறது அரசியல் களம். ஓபிஎஸ்-யின் நிழலாக உள்ள தேனி மாவட்ட நிர்வாகிகள், எப்படி இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அதை ஓபிஎஸ்-யிடம் கொண்டு சேர்த்தார்கள், என்கிற கேள்வி எழாமல் இல்லை. ஓபிஎஸ் விருப்பம் இல்லாமல் இந்த முயற்சி சாத்தியமில்லை என்கிற கேள்வியும் உடனே பயணித்தது. இந்நிலையில் தான், ஓபிஎஸ் குடும்பத்திற்கும் சசிகலா குடும்பத்திற்கும் ஆரம்பம் முதல் பாலமாக இருந்து வரும், ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜாவிடம் ஏபிபி நாடு சார்பில் பேசினோம்.... இதோ அந்த பிரத்யேக பேட்டி





















