மேலும் அறிய

வரதட்சணை வேண்டாம்; 50 பவுன் நகைகளை திருப்பிக்கொடுத்த மணமகன் | Alappuzha youth | anti-dowry |

கேரளாவில் கடந்த சில மாதங்களாக வரதட்சணை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த மாதம் மட்டும் கேரளாவில் விஸ்மயா,சுசித்ரா உள்ளிட்ட மூன்று இளம் பெண்கள் இந்த வரதட்சணை கொடுமை காரணமாக மரணம் அடைந்தனர். 

இந்தச் சம்பவங்கள் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவிலேயே அதிக பேர் கல்வி அறிவு கொண்ட மாநிலமாக இருக்கும் கேரளாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் அம்மாநில இளைஞர் ஒருவரின் செயல் மிகவும் நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆலப்பபுழா மாவட்டத்தின் நூரநாடு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 28).

இவர் ஒரு நாதஸ்வர இசைக்கலைஞர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுருதிக்கும்(21) திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயத்தின் போது தனக்கு வரதட்சணை வேண்டாம் என மணமன் சதீஷ் கூறியிருந்தார்.இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அங்குள்ள ஒரு கோவிலில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. இதற்காக மணப்பெண் சுருதி தனது பெற்றோர் சீதனமாக கொடுத்த 50 பவுன் நகைகளை அணிந்து மணமேடைக்கு வந்தார். இதை கண்ட மணமகன் சதீஷ், தனது வரதட்சணை வாங்க வேண்டாம் என்ற கொள்கையில் மணப்பெண் அணிந்து இருக்கும் நகையும் சேரும் என்று சுருதியிடம் கூறியுள்ளார். அத்துடன் மணமகள் விருப்பினால் 2 வளையல்களை மட்டும் அணிந்து விட்டு மீதி நகைகளை கழற்றி பெற்றோரிடம் ஒப்படைக்கும்படி சதீஷ் அவரிடம் கூறினார் .

இதைத் தொடர்ந்து தாலி கட்டியவுடன் மணமகள் கழுத்தில் அணிந்து இருந்த நகைகள் அனைத்தையும் கோவில் பூசாரி மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மணமகள் வீட்டாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சதீஷ் மற்றும் அவருடைய பெற்றோர் ஆகிய அனைவரும் சேர்ந்து இந்த நகைகளை மணமகள் வீட்டினருக்கு திருப்பி கொடுத்துள்ளனர். வரதட்சணை கொடுமை அதிகரித்து வரும் கேரள மாநிலத்தில் இளைஞர் ஒருவர் இப்படி செய்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை பலரும் பாராட்டி வருகின்றனர். வரதட்சணை வேண்டாம் என்று தான் கொண்ட கொள்கையில் இறுதி வரை உறுதியாக இருந்த இந்த இளைஞரின் செயல் மிகவும் பாராட்ட வேண்டிய செயலாக அமைந்துள்ளது.

செய்திகள் வீடியோக்கள்

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
விழுப்புரம் அருகே பரபரப்பு: ஓடும் கண்டெய்னர் லாரியில் திடீர் தீ விபத்து - ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!
விழுப்புரம் அருகே பரபரப்பு: ஓடும் கண்டெய்னர் லாரியில் திடீர் தீ விபத்து - ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Embed widget