TTF Vasan | "3 நாள் தான் உனக்கு டைம்” சுற்றி வளைக்கும் போலீஸ் தாக்கு பிடிப்பாரா TTF
மதுரை நீதிமன்ற உத்தரவுப்படி காவல் நிலையத்தில் டி.டி.எஃப் வாசன் கையெழுத்திட்டார். அப்போது 3 நாட்களுக்குள் செல்போனை ஒப்படைக்க டி.டி.எஃப் வாசனுக்கு காவல்துறை நேரில் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
டி.டி.எஃப் வாசன் என்ற பிரபல யூடியூபர் 4 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸை கொண்டுள்ளார். தன்னுடைய பைக் ஓட்டும் திறமையை கொண்டும், அவரது வசீகர பேச்சாலும் மிகப்பெரும் இளைஞர் படையை ரசிகர்களாக கொண்டுள்ளார். சினிமா பிரபலங்களைப் போல் செல்லும் இடமெல்லாம் வரவேற்புகளை பெற்று வருகிறார். ஆனால் இவரது செயல்பாடுகளால் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்லக் கூடும் என பல்வேறு விமர்சனங்களும் உள்ளது. அதே சமயம் வேகமாக பைக் ஓட்டும் போது விபத்தில் சிக்கிய வாசன் 10 ஆண்டுகள் பைக் ஓட்டக் கூடாது என நீதிமன்றம் தடை வித்துள்ளது. இதனால் அடிக்கடி வழக்கு வாங்கும் நபர் என்று டி.டி.எஃப் வாசன் கிண்டல் அடிக்கப்படுகிறார்.
நீதிமன்றம் பைக் ஓட்ட தடையால் தற்போது கார் மூலம் ஊர் சுற்றி வரும் வாசன், சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு மே 15-ம் தேதி டி.டி.எஃப் வாசன் தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார். அப்போது மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது, செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கினார். அதை வீடியோவாக பதிவு செய்து, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இதனையடுத்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தது. இவ்வழக்கில் டி.டி.எஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கியது. மதுரை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம்.
தற்போது இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார். அப்போது 3 நாட்களுக்குள் செல்போனை ஒப்படைக்க டி.டி.எஃப் வாசனுக்கு காவல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது டிடிஃப் ரசிகர்களுக்கும் டிடிஃப்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.