AAP's Bhagwant Mann Biography: மது சர்ச்சை To பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானின் கதை
AAP's Bhagwant Mann Biography: பஞ்சாபில் உள்ள 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 20ஆம் தேதி தேர்தல் நடந்தது. இன்று நடைபெற்று வரும் வாக்குப் பதிவில், தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும் சூழல் உள்ளது. முன்னதாக 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்று ஆம் ஆத்மி அறிவிக்காத நிலையில், தேர்தலில் இறங்கு முகத்தைச் சந்தித்தது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்த சூழலில், பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் குறித்து முதல்முறையாகப் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டார் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அர்விந்த் கேஜ்ரிவால். அந்த முடிவுகளின் அடிப்படையில் 21 லட்சத்துக்கும் அதிகமானோர் பகவந்த் மானுக்கு ஆதரவு அளித்தனர். இதனால் தேர்தலுக்கு முன்னதாக ஜனவரி 18ஆம் தேதியே பகவந்த் மான்(Bhagwant Singh Mann) முதல்வர் வேட்பாளர் என்று கேஜ்ரிவால் அறிவித்தார். அப்போதே அவர் யார் என்று தேசிய அளவில் கேள்வி எழுந்தது.