Yogi Adityanath Vs Pinarayi Vijayan: ‘உ.பி. கேரளாவாக மாறும்’ மோதிக்கொண்ட யோகி & பினராயி விஜயன்!
Yogi Adityanath Vs Pinarayi Vijayan: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேசத் தேர்தலில் வாக்காளர்கள் தவறு செய்தால் ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம் அல்லது கேரளா போல உ.பி மாற அதிக கால எடுக்காது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்த தெரிவித்திருந்தார். `யோகி ஆதித்யநாத் பயப்படுவதைப் போல உத்தரப்பிரதேசம் கேரளாவாக மாறினால், உத்தரப்பிரதேசம் சிறந்த கல்வி, வாழ்க்கைத் தரம், சுகாதார சேவைகள் மற்றும் சமூக நலன்களை அனுபவிப்பதோடு, சாதி, மத பெயர்களால் மக்கள் கொல்லப்படாத இணக்கமான நல் சமுதாயமாக உத்தரப்பிரதேசம் இருக்கும்.. அதை தான் உபி மக்கள் விரும்புகிறார்கள்" என்று பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார். பதிலடி





















