மேலும் அறிய

Kanwar Yatrai : கன்வார் யாத்திரை வழக்கு..பாஜக கூட்டணிக்குள் குழப்பம்? அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்

வட மாநில இந்துக்கள் மேற்கொள்ளும் கன்வார் யாத்திரையின் போது பக்கதர்களின் புனித தன்மையை பாதுகாப்பதற்காக என பாதைகளில் உள்ள உணவகங்களுக்கு கடை வைத்திருப்போர் தங்களது பெயர்களை எழுதி வைக்க வேண்டும் என்று உத்தர பிரதேச அரசுயிட்ட சர்சைக்குரிய ஆணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து அதிரடி உத்திரவிட்டுள்ளது.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹாரித்வார் உள்ளிட்ட ஜூலையில் பக்தர்கள் மேற்கொள்ளும் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.புனித தலங்களுக்கு சென்று அங்கு ஓடும் கங்கைநதியில் இருந்து புணித நீரை கொண்டு வந்து தங்கள் ஊர் சிவன் கோயில்களில் அபிஷேகம் செய்வதே இந்த யாத்திரையின் நோக்கம். கன்வார் யாத்திரை இன்று  துவங்குகிறது. இந்த யாத்திரையை மேற்கொள்ளும் பாதைகளில் உள்ள உணவகங்களின் பெயர் பலகைகளில் கடை உரிமையாளரின் பெயரும் இடம் பெற வேண்டும் என்று உத்தரப்பிரதேசம் மற்றும் உத்திராகண்ட் அரசு உத்தரவிட்டுள்ளனர். அதாவது பக்தர்கள் வசதிக்காக அவர்கள் செல்லும் வழியில் பலர் தற்காலிக உணவு மையம் அமைப்பது வழக்கம். இந்த முறை அப்படி உணவு கூடம் அமைப்பவர்கள் தங்கள் உரிமையாளரின் பெயர், முகவரி, செல்போன் ஆகியவற்றை கடைகளில் நன்றாக தெரியும்படி கடை போர்டுகளில் எழுத வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தனர். திடீரென கடைகளில் உரிமையாளர் பெயர் மற்றும் அனைத்து விவரங்களையும் பதிவிட உத்தரவிட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வான் இந்த முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. மேலும் பாஜக கூட்டணியில் உள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இந்த உத்தரவுக்கு எதிராக தன்னார்வ நிறுவனம் ஒன்று தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. உத்திரபிரதேச அரசின் உத்தரவு இஸ்லாமிய கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது சமூக ரீதியிலான பொருளாதார புறக்கணிப்பை உருவாக்கியுள்ளதாகவும் அவர்களின் வாழ்வாதாரத்தை இழக்க செய்யும் முயற்சி என்றும் இந்திய கூட்டணி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். பக்கதர்களின் புனித தன்மையை பாதுகாக்க இந்த உத்தரவு இருப்பது பாஜக கூட்டணி கட்சியினரை அதிருப்திக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடதக்கது.

இந்தியா வீடியோக்கள்

கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தொடர் விடுமுறை... கோயம்பேடு, கிளம்பாக்கம், எந்தெந்த ஊருக்கு எந்த பஸ் எங்கிருந்து கிளம்புது? முழு விவரம் இதோ
தொடர் விடுமுறை... கோயம்பேடு, கிளம்பாக்கம், எந்தெந்த ஊருக்கு எந்த பஸ் எங்கிருந்து கிளம்புது? முழு விவரம் இதோ
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
AIADMK: கூண்டோடு நீக்கம்.. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
AIADMK: கூண்டோடு நீக்கம்.. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!
பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
Embed widget