Cabinet Reshuffle | விரைவில் அமைச்சரவை மாற்றம்! SENIOR MINISTERS வெளியேற்றம்?சித்தராமையா vs டிகேஎஸ்
அடுத்த மாதம் அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ள நிலையில், தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவியை மேலிடத்தில் பேசி எப்படியும் வாங்கி விட வேண்டும் என்று முதல்வரும் துணைமுதல்வரும் போட்டி போட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் இருந்து வருகின்றனர். சித்தராமையா முதல்வராக பொறுப்பேற்று அடுத்த மாதத்துடன் இரண்டரை வருடம் முடியஉள்ள நிலையில் தான் அங்கு பல்வேறு மாற்றங்கள் நடைபெற உள்ளது. அதாவது, அடுத்த மாதம் அமைச்சரவை மாற்றம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தான், முதலமைச்சராக இருக்கும் சித்தராமையா தனக்கு ஆதரவு எம்.எல்.ஏ-க்களு அமைச்சரவை மாற்றத்தில் வாய்ப்பு கொடுப்பதற்காக காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறதே. அதேபோல், துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக் அமைச்சர் பதவியை எப்படியும் வாங்கி கொடுத்தவிட வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறாரன். இருவரும் அடுத்தடுத்து டெல்லிக்கு சென்றுள்ளனர். அங்கு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி மற்றும் சோனிய காந்தியை சந்திக்கவும் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இது தொடர்பாக பேசிய சித்தராமையா, “அமைச்சரவையை மாற்றி அமைப்பது குறித்து டெல்லி மேலிடம் நான்கு மாதங்களுக்கு முன்னரே என்னிடம் பேசியது. இரண்டரை வருடம் முடிந்த உடன் அதை செய்வோம் என்று நான் கருத்து தெரிவித்தேன். அடுத்த மாதத்துடன் நாங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிகிறது. நான் டெல்லி சென்று தலைவர்களை சந்தித்து அவர்களின் வழிகாட்டுதல் படி செயல்படுவேன்”என்று கூறியுள்ளார்.
அதேபோல் துணை முதலமைச்சர் சித்தராமையா டெல்லியில் பேசுகையில்,” நான் டெல்லி வருவது ஒன்றும் புதிதில்லை. கட்சி மேலிட தலைவர்களை சந்திக்கிறேன். அமைச்சரவை மாற்றும் குறித்து சரியான தகவல தெரியவில்லை”என்று கூறியுள்ளார். ஆனால் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு இடையே அமைச்சர்வரை மாற்றத்தில் போட்டி ஏற்ப்பட்டுள்ளதாக எதிர்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.





















