Haridwar Bus Accident | அன்பே சிவம் பட பாணியில்..நடந்த விபத்து...ஹரித்வாரில் பயங்கரம்
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஹரித்வாரில் இருந்து டேராடூன் நோக்கிச் சென்ற பேருந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் பல பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், இருபதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காட்சிகள் வெளியாகி பரபரப்பௌ ஏற்படுத்தியுள்ளது.
மொராதாபாத் ரோட்வேஸ் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, நெடுஞ்சாலையின் பாதுகாப்புச் சுவரை உடைத்து, தீன்தயாள் உபாத்யாய் பார்க்கிங்கின் நுழைவு வாயிலில் கவிழ்ந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து குறித்து ஹரித்வார் எஸ்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், மொராதாபாத்தில் இருந்து டேராடூனுக்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது பாலத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தையடுத்து, சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டாலும், சீரான போக்குவரத்து உடனடியாக தொடங்கப்பட்டது.
இந்த விபத்தில் காயம் அடைந்த பயணி ரவி சவுகான் கூறுகையில், நான் ஹரித்வார் ஐஎஸ்பிடியில் இருந்து பேருந்தில் அமர்ந்து டேராடூனுக்கு சென்று கொண்டிருந்தேன். முன்னால் எந்த வாகனமும் இல்லை, சாலை முற்றிலும் காலியாக இருந்தது, பேருந்தும் வேகத்தில் இருந்தது, அது வேகத்தைக் குறைக்கவில்லை. கார் வலது பக்கம் சென்று கொண்டே இருந்தது, டிரைவர் இடது பக்கம் எடுக்கவில்லை, இடது பக்கம் எடுத்திருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும். இதன் காட்சிகள் வெளியாகி பரபரப்பை எற்படுத்தியுள்ளது.